வணக்கம்!
மலர்களை இறைவனுக்கு படைப்பது என்பது ஒரு அற்புதமான பலன்களை தரும். மலர்களை கொண்டு தான் அனைத்து தெய்வங்களும் அலங்கரிக்கப்படுகின்றது. மலர்களை கொண்டு மாலை தொடுத்து போடுவதைவிட உதிரிபூக்களாக இறைவனுக்கு போடுவது நல்ல பலனை தரும்.
உதிரிபூக்களாக ஏன் இறைவனுக்கு பயன்படுத்த சொல்லுகிறேன் என்றால் மாலைகளை தொடுக்கும்பொழுது பிறர் தொடுக்கும்பொழுது அதில் அவர்களின் எண்ணங்கள் பதிந்து இருக்கும். அது அந்தளவுக்கு தூய்மையானதாக இருக்கும் என்று சொல்லமுடியாது அதனால் உதிரிபூக்களை பயன்படுத்துங்கள் என்கிறேன்.
இன்றைய காலத்தில் அதிகமாக பிற மதத்தினர்கள் பூக்கடைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் அவர்களின் தெய்வங்களை வணங்கிவிட்டு இந்த தொழிலில் ஈடுபடும்பொழுது அது அவர்களின் தெய்வங்களுக்கு உரியதாக இருக்கும். அதனை கொண்டு வந்து இறைவனுக்கு போடகூடாது என்பதால் இதனை தவிர்க்கவேண்டும்.
உதிரிபூக்களை வாங்கி அதனை இறைவனுக்கு சமர்பியுங்கள். உங்களை பெரிய இடத்திற்க்கு கொண்டு செல்லும். அந்த காலத்தில் துளசி வில்வம் போன்ற தழைகளை தான் மனிதர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். இன்றைக்கும் இதனை பயன்படுத்துகின்றனர். அம்மனாக இருந்தால் வேப்பிலையை வைத்து வழிபட்டு இருக்கின்றனர்.
உங்களின் மனதில் பாசமாக இந்த இலைகளை வாங்கி இறைவனுக்கு கொடுங்கள். அதிகமான பலன்களை வாரி வழங்கும். ஏன் இப்படி வழங்குகிறது என்றால் இயற்கையோடு இணைந்த ஒன்றல்லவா அதனால் அப்படி கொடுக்கிறது. நாம் கூட இப்படிப்பட்ட தழை மற்றும் உதிரிபூக்களை தான் அம்மனுக்கு அதிகமாக கொடுத்து பூஜைகளை செய்கிறோம். நீங்களும் இப்படி செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment