வணக்கம்!
ஜாதகத்தில் உள்ள பிரச்சினைகளை களைவதற்க்கு நாம் பரிகாரத்தை பரிந்துரை செய்துக்கொண்டு வருகிறோம். அதே நேரத்தில் உங்களின் உடலின் உணவு தேவைகளையும் சரியாக கொடுத்து வாருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். இதில் ஒரு சிலர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டாலும் பலர் இதனைப்பற்றி கேட்கவில்லை என்று வெளிப்படையாகவே சொல்லுகிறேன்.
ஒரு பதிவில் உங்களை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் என்று பதினைந்து பிரச்சினையை சொல்லி அதற்கும் என்னை தொடர்புக்கொள்ளவேண்டும் என்று சொல்லிருந்தேன். அதற்கும் குறைந்த பட்ச நபர்கள் மட்டும் தொடர்புக்கொண்டு பேசினார்கள்.
மேலே சொன்ன இரண்டு ஆலோசனை மற்றும் பரிகாரத்திற்க்கு நான் கட்டணம் ஏதும் கேட்கவில்லை. இலவசம் என்று சொல்லி தான் அதனை நான் சொல்லிருந்தேன். பலர் அதனைப்பற்றி கேட்கவில்லை என்று சொல்லலாம்.
தன்னை தயார் செய்வதில் ஒருவர் அதிகம் கவனம் காட்டவேண்டும். தன்னை தயார் செய்வதில் குறை வைத்தால் அவர் தயார் செய்து வைத்திருக்கும் அனைத்தும் அவருக்கு பயன்படாமல் போய்விடும்.
நமது ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைத்து இளைஞர்கள் மேலும் தனிக்கவனம் செலுத்தி அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை அந்தளவுக்கு அக்கறை காட்டி வருகிறேன். அவர்களுக்கு எல்லாம் நானே தொடர்புக்கொண்டு இதனை எல்லாம் செய்து வாருங்கள் என்று சொல்லுகிறேன். இவர்கள் எனக்கு ஏதாவது கொடுப்பார்கள் என்பதற்க்காக இதனை செய்யவில்லை. என்னுடைய கடமை அதனை செய்கிறேன்.
ஆன்மீகம் என்றாலே அது சாமியார்களுக்கு தான் என்பது கிடையாது. ஆன்மீகம் இல்லறத்திற்க்குள் இருப்பவர்களுக்கு தான் தேவைப்படும். இல்லறத்தில் ஒருவர் இருந்தால் அவரை நம்பி அந்த குடும்பம் இருக்கும். தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்ற ஆன்மீகம் சொல்லும் அனைத்தையும் பின்பற்றவேண்டும்.
ஏதோ சம்பாதிக்கிறோம் அதனை குடும்பத்திற்க்கு கொடுத்தால் போதும் என்று நினைக்க கூடாது. தன் வாரிசுக்கு சொத்து பணம் எல்லாம் கொடுப்பதை விட ஆராேக்கியத்தையும் ஆன்மீகத்தையும் கொடுப்பவர் தான் நல்ல இல்லறவாதி. எத்தனை பேர் இதனை செய்கின்றீர்கள் என்று தெரியாது இனிமேலாவது இதனை கற்று உங்களின் வாரிசுகளுக்கு கொடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment