வணக்கம்!
நீங்கள் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைக்கு எந்த பூஜையை செய்வீர்கள் அல்லது எப்படிப்பட்ட வழிபாட்டை செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பிருந்தார்.
என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்பதை கொஞ்சம் முன்கூட்டியே கணித்துவிடுவது உண்டு. தீமை என்று வரும் காலங்களில் அதிகமாக கோவில்களில் வாசம் செய்வது உண்டு. அதிகமாக அம்மன் கோவிலிலேயே இருப்பேன்.
தீமை என்று வந்தால் அது வேலை செய்யாத இடம் கோவிலாக இருக்கும். கோவிலில் அதிக நேரத்தை செலவிடுவது உண்டு. பிரச்சினை என்பது கிரகங்களின் வழியாக தான் நமக்கு வருகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அந்த கிரகத்திற்க்கு சென்று ஒரு தீபம் வாங்கி ஏற்றி வைத்து வழிபட்டுவிட்டு வருவேன்.
நான் அதிகம் நல்லெண்ணெய் தீபத்தை தான் ஏற்றுவது உண்டு. நல்லெண்ணெய் கொஞ்சம் தரமாக இருக்கின்றது. கடையில் வாங்கும் நெய்தீபம் சரியில்லை என்பதால் நல்லெண்ணெய் தீபம் அனைத்து கிரகத்திற்க்கும் நான் பயன்படுத்துவது உண்டு.
அதிகப்பட்சமாக ஒரு தீபம் தான் ஏற்றிவிட்டு வணங்கி வருவேன். கிரகங்களுக்கு என்று இப்படி செய்வது உண்டு. அதிகமான பிரச்சினை வந்தால் அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு ஒரு அர்ச்சணையும் சேர்த்து செய்துவிடுவேன்.
பெரும்பாலும் கூட்டம் இல்லாத கோவிலுக்கு சென்று இதனை செய்வது உண்டு. கூட்டம் அதிகம் வருகின்ற கோவிலில் தீபம் ஏற்றும் இடம் என்பதை ஒதுக்குபுறமாக வைத்துவிடுகின்றனர் அல்லது கோவிலிலுக்கு வெளியில் வைத்துவிடுகின்றனர் அது சரிப்பட்டு வராது என்பதற்க்காக அப்படி செய்வது உண்டு.
தினமும் பூஜை அம்மனுக்கு என்று செய்தாலும் கிரகங்களுக்கு மேலே சொன்னதை மட்டும் செய்துவிடுவேன். அவ்வப்பொழுது தனிப்பட்ட ஹோமம் எனக்காக செய்துவிடுவேன். பொதுமக்களை சந்திக்கும் தொழிலை செய்வதால் வெளியில் இருந்து பிரச்சினை வரும் என்பதால் அதனை தவிர்க்க இதனை செய்வேன்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment