வணக்கம்!
நேற்று ஒரு கோவிலுக்கு சென்றேன். கோவிலில் உள்ள ஐயர் ஒரு வயது முதியோராக இருக்கும் நபரிடம் நடந்துக்கொண்ட விதம் என்னை அதிக கோபத்திற்க்கு ஆட்படுத்தியது. தற்பொழுது ஐயர் எல்லாம் கடவுளுக்கு பயப்பட்டு செய்வதில்லை. ஏதோ வணிகம் செய்வது போல செய்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
நாம் பல காலங்களாக ஐயர்களுக்கு காசு கொடுப்பதில்லை என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறேன். நான் பழைய பதிவில் சொல்லிருந்தேன். கோவிலுக்கு சென்றால் அங்குள்ள ஐயர்களிடம் பணம் கொடுங்கள் அது குருவிற்க்கு உகந்தது என்று சொல்லிருந்தேன்.
இனிமேல் இந்த மாதிரியான செயலை செய்யாதீர்கள். கடவுளுக்கு பயந்து ஐயர் நடந்துக்கொண்டு இருந்தால் மட்டும் பணம் கொடுங்கள் அப்படி இல்லை என்றால் பணத்தை கொடுக்காதீர்கள். தற்சமயம் உள்ள ஐயர்கள் எல்லாம் தன்னுடைய வேலையை ஒழுங்காக செய்வதில்லை.
குரு பரிகாரத்திற்க்கு பிற பரிகாரங்களை செய்யுங்கள். ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிருந்தேன். உண்டியல் போடாதீர்கள் என்று அது போலவே இந்த பதிவில் இனிமேல் ஐயர்களுக்கு பணம் கொடுக்காதீர்கள்.
பெரும்பாலும் நான் கோவிலுக்கு சென்றால் அமைதியாக நின்று வணங்கிவிட்டு வந்துவிடுவது உண்டு. ஒரு சில கோவில்களில் ஒரு தீபம் மட்டும் ஏற்றிவிட்டு வந்துவிடுவது உண்டு. மிக மிக அவசியம் என்று ஒன்று வந்தால் மட்டுமே அர்ச்சனை செய்வது உண்டு. இதனை போலவே நீங்கள் முடிந்தால் பின்பற்றி வாருங்கள்.
இன்று பழனி செல்கிறேன். மாலை நேரத்தில் பழனியில் இருப்பேன். ஜாதக கதம்பத்தில் உள்ளவர்களுக்காகவும் பழனி முருகனிடம் பிராத்தனை செய்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
2 comments:
thank you sir
நன்றி அய்யா
Post a Comment