Followers

Monday, April 16, 2018

படையல்


வணக்கம்!
         படையல் என்ன என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். நேற்றைய பதிவில் மாரியம்மனுக்கு படையல் என்று சொல்லிருந்தேன். இந்த படையலை தான் என்ன என்று கேட்டார். ஒவ்வொரு ஊரிலும் மாரியம்மன் இருக்கும். அதிகப்பட்சம் தமிழ்நாட்டில் மாரியம்மன் கோவில் அனைத்து ஊரிலும் இருக்கும். கேரளாவில் பகவதிஅம்மன் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைத்தாலும் எல்லாம் மாரியம்மன் தான்.

வருடத்திற்க்கு ஒரு முறை இந்த கோவில் திருவிழா நடைபெறும். கோவில் திருவிழாவில் முதல் நாள் படையல் விழா என்று அழைப்பார்கள். மாரியம்மனுக்கு படையல் வைப்பது. இதனை அவர் அவர்களின் வீட்டில் வைப்பார்கள்.

மாரியம்மனுக்கு படையல் வைப்பது அவர் அவர்களின் பூஜையறையில் வைக்கமாட்டார்கள். தனியாக ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் சுவற்றில் ஒரு தேர் படத்தை திருநீற்றை தண்ணீரில் குழைத்து தேர்படம் வரைவார்கள். அந்த இடத்தில் ஒரு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மாவிலை மற்றும் வேப்பிலை கொத்தை போடுவார்கள். அதன் முன்பு ஒரு இலையை வைத்து அதில் மாரியம்மனுக்கு என்று படையல் போட்டு சாம்பிராணி தீபாராதனை காட்டுவார்கள்.

மாரியம்மனுக்கு பொதுவாக எல்லார் வீட்டிலும் கொழுக்கட்டை பிடித்து வைப்பார்கள். மாரியம்மனுக்கு கொழுக்கட்டையோடு அவர் அவர்களின் வழக்கத்திற்க்கு தகுந்தமாதிரியான அசைவம் அல்லது சைவ சமையலை சமைத்து படையல் செய்வார்கள்.

மாரியம்மனுக்கு தீபாராதனை முடிந்த பிறகு பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்திற்க்கு தீபாராதனை காட்டுவார்கள். இது பல கிராமங்களில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. இது போன்றே உங்களின் மாரியம்மனுக்கும் செய்யலாம்.

ஆன்மீக அனுபவங்கள் படித்த நண்பர்களும் இந்த ஜாதக கதம்பம் கட்டண சேவையில் இணைந்துக்கொண்டு இருக்கின்றனர். அனைவரும் கட்டணத்தை செலுத்தி கட்டண சேவையில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: