வணக்கம்!
ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். நீங்கள் இராமாயணம் மற்றும் மகாபாரதம் படித்து இருக்கின்றீர்களா என்று கேட்டார். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என்று கேட்டதற்க்கு அவர் சொன்னார் இவ்வளவு எழுதுகின்றீர்கள் அதனால் கேட்டேன் என்றார்.
ஒருவர் இராமாயணம் மற்றும் மகாபாரதம் எல்லாம் படிக்க தேவையில்லை. அவர் அவர் வாழ்க்கையை ஒரு நோட்புக்கில் எழுதி வந்து ஒரு குறிப்பிட்ட வயதிற்க்கு மேல் அதனை எடுத்து பார்த்தால் இரண்டு இராமாயணம் மற்றும் மகாபாரத்திற்க்கு குறைச்சல் இல்லாமல் ஒரு மனிதனின் வாழ்க்கை இருக்கும்.
ஒரு மனிதனின் முழுவாழ்க்கையும் எழுதினால் கண்டிப்பாக அது கோடி பக்கங்களுக்கு மேல் இருக்கும். இராவணன் போல் இந்த சமுதாயம் அவனை அந்தளவுக்கு போட்டு வறுத்து எடுத்து இருக்கும். அதனால் தினந்தோறும் நாம் பார்க்கின்ற விசயத்தை வைத்தே நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
உங்களின் தினந்தோறும் வாழ்க்கையை அப்படியே ஒரு நோட்டில் எழுதிவாருங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு அதனை படித்துபாருங்கள். உங்களின் பாவத்தை நீங்களே போக்கிக்கொள்ளலாம். இராமாயணம் மற்றும் மகாபாரத்தை படித்து பாவத்தை போக்கிக்கொள்வதை விட உங்களை படித்தே பாவத்தை போக்கிக்கொள்ளலாம்.
எப்படி பாவம் போகும் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். இராமனும் தர்மனும் போல தான் நீங்களும். அவர்கள் பாவத்தை போக்கும் விதமாக கதாபாத்திரம். அதே பாத்திரத்தை நீங்களே தினந்தோறும் நடித்துக்கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் எழுதி பாருங்கள். உங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment