Followers

Friday, April 6, 2018

சிறப்பு பதிவு 6


ணக்கம்!
         நம்ம ஆட்கள் சோதிடத்தை வைத்து என்ன சொல்லிவிடமுடியும் என்று ஒரு சில மேதாவிதனத்தோடு இருப்பார்கள். சாேதிடம் என்றாலே இது தான் என்று அவர்களின் மனக்கணிப்பு அப்படிப்பட்டது என்பதால் அதனைப்பற்றி அலட்டிக்கொள்வதில்லை என்பதைவிட அலட்சியம் என்றே சொல்லலாம்.

ஒழுங்கான சோதிடம் தெரிந்தால் அவன் ஞானியாக தான் இருப்பான். ஏன் இதனை சொல்லுகிறேன் என்றாலே அரைகுறையாக நாம் சோதிடத்தை அணுகுவதால் அது அறைகுறையாகவே நமக்கு புலப்படுகின்றது. ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுவதும் முந்தைய ஜென்மம் இந்த ஜென்மம் அடுத்த ஜென்மத்தை காட்டக்கூடிய ஒரு கருவியை அவ்வளவு எளிதில் நாம் எடைப்போட்டால் நமக்கு தான் ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

சோதிடம் சொல்லும் சோதிடர்களும் அதனை விளக்கி எல்லாம் சொல்லுவதில்லை நான் உள்பட மேலோட்டமாக அதனை சொன்னதால் தான் சோதிடத்தை அணுகும் மக்களின் நிலையும் மேலோட்டமாகவே இருக்கும்.

உதாரணத்திற்க்கு ஒன்றை சொல்லுவோம். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் சோதிடம் பார்க்க ஒரு சோதிடரிடம் சென்று கேட்டு இருக்கிறார். அவர் உனக்கு வருகின்ற பிரச்சினைக்கு சந்திரன் காரணம் சந்திரன் மாறினால் உனக்கு நல்லது நடக்க ஆரம்பிக்கும் என்று சொல்லிவிட்டுள்ளார். அது எப்பொழுது மாறும் என்று கேட்டுள்ளார். இரண்டு வருடம் ஆகும் என்றுள்ளார். எப்படி இருக்கின்றது பாருங்கள். அதாவது எதையாவது ஒன்றை சொல்லுவது.

நன்றாக கவனித்தால் உங்களுக்கு ஒன்று புரியவரும் சனி செவ்வாய் சேர்க்கை என்று சொல்லுவார்கள். இதனை பலன் சொல்லும்பொழுது கொஞ்சம் கவனித்து பாருங்கள். உலகம் அழியபோகின்றது என்று சாெல்லுவார்கள். செவ்வாய் சனி சேர்க்கை வருடம் முழுவதும் நடைபெறுகின்ற ஒன்று. சோதிடர்கள் சொல்லுவது போல உலகம் அழிந்தால் வருடம் ஒரு முறை உலகம் அழிந்து இருக்கவேண்டும்.

பிரச்சினையை அலசி சொல்லும் விதத்திலும் நிறைய தவறு இருக்கும். உங்களுக்கு வந்திருக்கின்ற பிரச்சினை எது என்பதை சொல்லும்விதத்திலும் தவறு இருக்கின்றது. சம்பந்தமே இல்லாமல் ஒரு கிரகத்தை காட்டிக்கொண்டு அதற்கு பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்துக்கொண்டு இருப்பார்கள். சோதிடம் என்பது வந்த பிரச்சினையை சொல்லுவதைவிட வருப்போகின்ற பலனை துல்லியமாக சொன்னால் அது நன்றாக மக்களுக்கு பயன்படும். 

மக்களிடம் ஒரு குறை இருக்கும் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து முடிந்தபிறகு சோதிடர்களிடம் சென்று எனக்கு இந்த பிரச்சினை எதனால் வந்தது என்று கேட்பார்கள். இவர்கள் அனைத்தையும் முடித்துவிட்டு கதை முடிந்தபிறகு முதலில் இருந்து வாருங்கள் என்று சொல்லுவதுபாேல சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இது எதற்க்கும் பயன்படாது.

ஒரு நோய் வந்தால் அந்த நோய் எப்பொழுது செல்லும் என்பதை சோதிடத்தை வைத்து பார்த்து சொல்லமுடியும். ஒரு சிலருக்கு ஒரு நோய் வந்தால் குறைந்தது இருபது வருடங்களுக்கு அவர் அந்த நோயால் கஷ்டப்படுவது போல இருக்கும். இப்பொழுது நாம் கிரகங்கள் மாறும் பலனை வைத்து சொன்னால் கண்டிப்பாக அது தவறு நடந்துவிடும். கிரகங்கள் நகரும் பலனை வைத்து சொன்னால் அதிகப்பட்சம் இரண்டரை வருடம் சொல்லலாம். அதற்கு மேல் சொல்லமுடியாது. அதற்கு வேறு ஒன்றை பார்த்து சொல்லவேண்டியதும் இருக்கின்றது.

நாம் அடுத்தவர்களைப்பற்றி குறை சொல்லுவதற்க்காக இந்த பதிவை எழுதவில்லை. சின்ன சின்ன குறைகளை நாம் எப்படி கலைவது என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். ஒரு மனிதனுக்கு பயம் என்பதை காட்டினால் அவனால் சுயமாக வாழமுடியாது. அவனின் அடியாழத்தையே பயம் அசைத்து பார்த்துவிடும். பொதுவாக சோதிடர்கள் காட்டுவது ஒரு மனிதனுக்கு பயமாக தான் இருக்கின்றது வழியை காட்டுவது கிடையாது. மனதில் கொஞ்சம் பயத்தை தூவிவிட்டு அதன் வழியாக குளிர்காய்ந்துவிடும் வேலையாக தான் இருக்கும்.

நாம் சொல்லுவது என்ன என்றால் வருகின்ற பயத்தை போக்கும் வழியை சொல்லிவிடுவாேம். நம்மால் முடிந்தவரை பயத்தை போக்கி ஒரு நல்ல வாழ்க்கையை கொடுக்க என்ன வழி என்பதை சோதிடத்தை வைத்து சொல்லபோகிறோம்.

சோதிடம் என்பது உருவானதே வழியை காட்ட தான் பயத்தை உருவாக்கி மனிதர்களை காவு வாங்குவதற்க்கு கிடையாது. சோதிடத்தில் உள்ள வழிகளை சொன்னால் முடிந்தவரை மக்கள் அதனை தேர்ந்தெடுத்து செல்லமுடியும்.

செவ்வாய் சனி என்று சேர்ந்துவிட்டது நீங்கள் அழியபோகிறீர்கள் என்று சொன்னால் எப்படிப்பட்ட வீரனாக இருந்தாலும் பயந்துபோய்விடுவான். சனி செவ்வாய் சேர்ந்த நாளில் நாம் எப்படிப்பட்ட வேலையை செய்யதால் நாம் அதில் இருந்து பயன்பெறலாம் என்பதை சொல்லிவிட்டால் அதனால் பயன்பெற தான் செய்வார்கள். ஒவ்வொரு கிரகத்திற்க்கும் இப்படிப்பட்ட பயன்பெறும் வாய்ப்பு நிறைய இருக்கின்றது.

செவ்வாய் சனி சேர்ந்த காலக்கட்டத்தில் உங்களின் நிலம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களை பேசலாம். கூட்டம் சும்மா கூட்டினால் கூட இந்த நேரத்தில் வந்துவிடுவார்கள். செவ்வாய் பலம் பெற்ற ஆள்களின் பலம் இழக்கும் நேரமாக இந்த நேரத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்களின் எதிரிக்கு செவ்வாய் பலமாக இருந்தால் அவனை ஒன்றும் செய்யமுடியாமல் திணறுவீர்கள். நீங்கள் இந்த நேரத்தில் அவனுக்கு செக் வைக்கவேண்டும் என்றால் எளிதில் வைத்துவிடலாம். நான் சொன்னது ஒரு சின்ன உதாரணம் இன்னும் பல இருக்கின்றன.

எந்தந்த நேரத்தில் என்னென்ன செய்தால் நமக்கு அதிக செலவு வராமல் செய்வது காரியம் எளிதாக முடிவது என்பதை தெரிந்துக்கொண்டால் செய்தால் உங்களை விட புத்திசாலி இந்த உலகத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்க்கு ஒரு கட்டண பதிவை ஆரம்பித்து இருக்கிறேன். அனைவரும் இணைந்து பயன்பெற்றுக்கொள்ள அன்போடு அழைகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: