Followers

Saturday, September 21, 2019

புரட்டாசி விரதம்


வணக்கம்!
          புரட்டாசி விரதம் அதிலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் என்ற ஒன்று பெரிய விஷேசமான ஒரு விரதமாகவே பல இடங்களில் நடைபெறும். எங்களின் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரில் எல்லாம் இந்த நிகழ்வு நடைபெறும். எங்களின் ஊரில் இது இல்லை.

புரட்டாசி விரதம் சனிக்கிழமை தோறும் புரட்டாசி மாதம் முழுவதும் நடைபெறும். இந்த மாதத்தில் அசைவ உணவை தவிர்த்துவிடுவார்கள்.  மிக மிக சுத்தமாக இருப்பார்கள். வெளியில் ஏதோ ஒரு பக்கத்து ஊருக்கு சென்று வந்தாலும் உடனே வீட்டிற்க்குள் நுழையமாட்டார்கள். வெளியில் குளித்துவிட்டு தான் வீட்டிற்க்குள் நுழைவார்கள்.

வீட்டை அந்தளவுக்கு சுத்தமாக வைத்திருப்பார்கள். சனிக்கிழமை ஏதோ ஒரு நாளில் அனைவரையும் அழைத்து விருந்து அதாவது அன்னதானம் செய்துக்கொடுப்பார்கள். இது புரட்டாசி விரதம் பிடிக்கும் அனைவரின் வீட்டிலும் நடைபெறும் ஒரு நிகழ்வு.

புரட்டாசி விரதம் பெருமாளுக்காக பிடிக்கும் ஒரு விரதம். இதில் சுத்தமாக இல்லை என்றால் பெருமாள் அந்த குடும்பத்தை அழித்துவிடுவார் என்று கூட சொல்லுவார்கள். பெரும்பாலும் நான் பார்த்தவரையில் இந்த விரதம் பிடிக்கும் நபர்கள் ஒரு சில காலங்களில் மிகுந்த ஒரு வளர்ச்சியை நோக்கி செல்கின்றனர்.

ஒரு சில குடும்பங்கள் வீணாக போய்விடுகின்றன. அதாவது புரட்டாசி விரதம் பிடிக்கும் குடும்பம் வீணாக போனால் அந்த குடும்பத்தில்  ஒன்றும் இல்லாத நிலையில் போய்விடுகின்றனர். இது எதற்காக இப்படி நடக்கின்றது என்பது தெரியவில்லை. புரட்டாசி விரதம் நல்லதா அல்லது கெடுதலா என்று கேட்கலாம். ஒட்டுமொத்த குடும்பமும் சுத்தமாக இருந்தால் நல்லது அப்படி இல்லை என்றால் கெடுதல் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: