வணக்கம்!
ஒருவரின் நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு அவரின் பாவத்தைப்பற்றி சொல்லி அதற்கு தீர்வு கண்டுபிடிக்கலாமா என்று நண்பர் ஒருவர் கேட்டுருந்தார்.
நட்சத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவர்க்கு தீர்வு காணமுடியாது அவரின் ஜாதகத்தில் அமர்ந்த ஒன்பது கோள்கள் மற்றும் துணைக்கு மாந்தியையும் சேர்த்து பார்த்து அதற்கு வழியை தேடவேண்டும்.
வெறும் நட்சத்திரத்தை மட்டும் வைத்தால் உங்களுக்கு ஜாதக கட்டமே தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுவிடும். நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு பொதுபலனை சொல்லலாம். நட்சத்திரத்தை மட்டும் வைத்து பலனை சொல்லிவிடமுடியாது.
நட்சத்திரம் மட்டும் போதும் என்றால் கிரகத்தை கண்டுபிடித்து இருக்கமாட்டார்கள் அல்லவா. சோதிடத்தில் சொல்லப்பட்ட அனைத்து விசயத்தையும் நாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பலனை சொன்னால் மட்டுமே சரியாக வரும் அப்படி இல்லை என்றால் தவறாகவே அனைத்தும் போய்விடும்.
ஜாதகத்தில் உள்ள அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார்போல் பலனை பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையிலேயே ஒருவர் அதிக தோஷத்தை உடையவரா அல்லது குறைந்த தோஷத்தை உடையவராக இருக்கின்றா என்பதை எல்லாம் ஜாதகத்தின் உள்ள கிரகங்கள் தான் தீர்மானிக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment