வணக்கம்!
பெரும்பாலும் குலதெய்வத்தை கண்டுபிடித்து சொல்லுகிறேன் என்று சொல்லுவது எல்லாம் ஒரு குத்துமதிப்பாக அடித்துவிடுவதாகவே இருக்குமே தவிர அதில் உண்மை என்பது அந்தளவுக்கு இருக்காது.
குலதெய்வம் கண்டுபிடிக்கமுடியாமல் நிறைய பேர்கள் இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் சோதிடத்தின் துணைக்கொண்டு அல்லது ஏதோ குறி சொல்லுபவர்களின் வழி காட்டுதலோடு தேடுவார்கள். இதனை வைத்துக்கொண்டு உண்மையான குலதெய்வத்தை நாடுவது சிரமமாகவே இருக்கும்.
சாேதிடர்கள் ஏதோ ஒன்றை சொல்லவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள் இல்லை என்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை வணங்க சொல்லுவார்கள். இது நன்றாக ஆய்வு செய்து பார்த்தால் அது தவறாகவே இருக்கும்.
உங்களுக்கு முடிந்தவரை உங்களின் முன்னோர்கள் வழி எங்கு இருக்கின்றது அவர்கள் எந்த தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருகின்றனர் என்பதை அந்த நன்கு கேட்டு அறிந்துக்கொண்டு அதனை பின்பற்றி வருவது சிறப்பாக இருக்கும்.
தற்பொழுது நமது மக்கள் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் கூட முன்னோர்கள் வழிகாட்டுதல் படி தான் வணங்கிக்கொண்டு இருக்கின்றனர். பலர் வணங்கிக்கொண்டு இருக்கும் குலதெய்வம் அவர்களின் குலதெய்வமாக இருக்காது. முன்னோர்களின் ஒருவர் ஏதோ ஒரு கோவிலில் எடுத்து வந்த வைத்த இஷ்டதெய்வத்தை கூட குலதெய்வமாக வணங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment