வணக்கம்!
புகைப்படங்கள் என்றவுடன் ஒன்றைப்பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. தஞ்சாவூர் ஓவியத்தை வரைந்து வீடுகளில் மாட்டிவைக்கும் பழக்கம் நிறைய செல்வந்தர்களிடம் காணப்படும். வீட்டில் சும்மா ஏதோ படத்தை வாங்கி மாட்டிவைக்காமல் அந்த படத்தின் வழியாகவும் நன்மை நடைபெறவேண்டும் என்று நினைத்து நமது மக்கள் செயல்பட்டு இருக்கின்றனர்.
நமது படத்தை வீட்டில் மாட்டி வைக்காமல் ஒரு படம் வைத்தாலும் அந்த படத்தின் வழியாக அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நன்மை தரவேண்டும் என்று எண்ணி தஞ்சாவூர் ஒவியத்தில் வரைந்த கடவுளின் படங்களை வைத்திருக்கின்றனர்.
பெரிய செல்வந்தர்களின் வீடுகளில் எல்லாம் இந்த தஞ்சாவூர் ஒவியத்தை வரைந்து வைத்திருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். இதனை நாமும் செயல்படுத்தலாம். தஞ்சாவூர் ஒவியம் செலவு அதிகமாக இருந்தாலும் அதில் இருந்து பயன் அதிகம் என்பதால் இதனை செய்யலாம்.
என்னுடைய தேவைக்கு என்று நான் இதுவரை வாங்கவில்லை. இதனை வாங்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கின்றது. அதற்கு காலம் வரும்பொழுது அதனை செயல்படுத்தலாம் என்று நினைத்து இருக்கிறேன்.
தஞ்சாவூர் ஒவியத்தில் அப்படி என்ன விஷேசம் இருக்கின்றது என்று கேட்கலாம். இதனைப்பற்றி ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்லுவார்கள். என்னை கேட்டால் இதனை வைத்திருப்பவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்பதை மட்டும் உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment