வணக்கம்!
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் தீயகிரகமான இராகு கிரகம் இருந்தால் பெரும்பாலானவர்களின் கணிப்பு இவர் சரியில்லாத ஒரு ஆள். இவர்க்கு நிறைய காரிய தடை ஏற்படும் என்று சொல்லுவது உண்டு.
ஒன்பதில் இராகு கிரகம் இருந்தால் அது பித்ருதோஷத்தை காட்டுகின்றது அதனால் இவர்க்கு தடைகள் நிறைய ஏற்படும். இவரால் சாதிக்கமுடியாது என்று சொல்லுவார்கள். உண்மையில் அப்படிப்பட்ட கணிப்பு தவறாகவே அமைகின்றது.
ஒன்பதில் இராகு கிரகம் என்று எடுத்துக்கொள்ளகூடாது. பொதுவாக அப்படியே நாம் கணிக்க கூடாது. இராகு கிரகம் எந்த நட்சத்திரத்தில் செல்கின்றது. இராசி அதிபதியின் நிலை அனைத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தான் பலனை சொல்லவேண்டும்.
ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் நபர்கள் பெரும்பாலும் இளம்வயதில் அவரின் தந்தை சரியில்லாத நிலை இருந்தால் தான் அவரின் இளமை பருவம் பாதிப்படையும். தந்தை சரியாக இருந்தால் இளமை பருவமும் நன்றாக இருக்கும். அவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.
வறுமையில் தந்தை இருந்த காலக்கட்டத்தில் ஒன்பதில் இராகு இருந்தால் பிரச்சினை தான் இல்லை என்றால் பெரியதாக பாதிப்பதில்லை. பெரும்பாலான ஜாதகர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்க்கின்றனர்
பெரிய காரியத்தை எல்லாம் செய்யக்கூடிய ஆட்கள் யார் என்று பார்த்தால் இந்த ஒன்பதில் இராகு கிரகம் இருக்கும் ஆட்களாக தான் இருப்பார்கள். ஒன்பதில் இராகு உங்களுக்கு இருந்தால் நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்று நினைத்து செயல்படுங்கள். நன்றாக உங்களால் வாழமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment