வணக்கம்!
ஒரு சில காலக்கட்டத்தில் நான் ஒரு நினைப்பை நினைத்தேன் அதாவது நான் இறப்பது இந்த மருத்துவமனையில் இருக்கலாம். இந்த ஊரில் இப்படி இந்த மருத்துவமனையில் இறக்கலாம் என்ற ஒரு நினைப்பது அது. என்னடா இப்படி எல்லாம் நினைக்கலாமா என்று உங்களுக்கு தோன்றும் ஆனால் இது உண்மை.
நான் நினைத்த காலக்கட்டத்தில் நான் ஆன்மீகவாதி எல்லாம் இல்லை. அப்பொழுது இளமையான ஒரு காலக்கட்டத்தில் அதனைப்பற்றி நினைத்தேன். இது தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் ஏதோ எனக்குள் தோன்றியது அதனைப்பற்றி நினைத்தேன்.
ஒரு முறை நினைத்தால் பரவாயில்லை பலமுறை இதனைப்பற்றி நினைத்த காரணத்தால் அதுபோலவே ஒரு சூழல் எனக்கு உருவானது. சம்பந்தப்பட்ட ஊரில் நான் வசிப்பது போலவும் அது அமைய நேரிட்டது. நாம் என்ன நினைத்தோமோ அதனை உருவாக்க சூழலை உருவாக்கி வந்தது. அதன்பிறகு தான் இந்த எண்ணம் சரியில்லை என்பதை உணர்ந்து அதனை தவிர்த்து அதில் இருந்து மீண்டேன்.
உங்களுக்கு இதில் என்ன கிடைக்கின்றது என்றால் நாம் நினைப்பது ஒரு சாவாக இருந்தாலும் நமது மனது அதனை நோக்கி இழுத்துச்செல்கின்றது என்பதை உங்களுக்கு புரியவைக்க தான் இதனை சொன்னேன். நீங்கள் நினைக்கும் அனைத்தும் உங்களின் வாழ்வில் பெரும்பாலும் நடந்துவிடும்.
நமது எண்ணங்கள் நம்முடைய வாழ்க்கையை அதிகமாக உருவாக்கும். நல்ல எண்ணங்களாக இருந்தால் அதனை நாம் வரவேற்கலாம். என்னைபோல ஒரு கிறுக்குதனமான ஒரு எண்ணமாக இருந்தால் என்ன செய்வது இது போல உங்களுக்கும் தேவையில்லாத எண்ணங்கள் வரும் அதனை அப்படியே அசைப்போட்டுக்கொண்டு அந்த எண்ணத்தை வலு சேர்த்துவிடாதீர்கள்.
நம்மூரில் பல பேர் அமெரிக்கா சென்று செத்துவிடவேண்டும் என்று நினைப்பார் அது போலவே நிறையவும் நடந்து இருக்கின்றது. இதனை எல்லாம் ஒதுக்கி தள்ளிவைத்துவிட்டு உங்களின் நல்ல எண்ணங்களை உருவாக்குங்கள் அது உங்களுக்கு நல்ல வாய்ப்பை உருவாக்கிகொடுத்துவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment