Followers

Wednesday, May 29, 2019

இராசிபடி கலர் மற்றும் எண்


வணக்கம்!
          நம்முடைய வாகனம் மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு உங்களின் இராசிபடி அமையவேண்டும். நீங்களே மறுத்தாலும் உங்களின் இராசிப்படி அந்த கலர் உங்களுக்கு அமைந்துவிடும்.

ஒரு கார் வாங்கினாலும் அதில் உள்ள கலர் உங்களின் இராசிபடி அமையும் அல்லது உங்களின் இராசிக்கு உகந்தபடி அந்த கலர் அமைந்துவிடுவது உண்டு. இப்படி அமைந்தால் பெரும்பாலும் உங்களுக்கு இது நல்லதாக அமைந்துவிடும்.

ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் மிகுந்த பலத்தோடு தசாவை நடத்தும் அவர்களுக்கு அந்த தசாநாதன் எந்த கலரில் வருகின்றாரோ அந்த கலரில் அமைந்துவிடுவது உண்டு. ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் வலுவாக அமைந்துவிடுகின்றது.

உங்களுக்கு அமையும் எண் கூட இராசிப்படி அமைந்தால் அது உங்களுக்கு நல்லதை தருகின்றது. பலருக்கு எட்டாவது எண் என்றால் பிடிக்காது ஆனால் சனியை இராசி அதிபதியாக கொண்டவர்களுக்கு இந்த எட்டாவது எண் மிகுந்த இராசியாக அமையும்.

உங்களின் இராசிபடியும் மற்றும் உங்களின் தசாநாதன் எப்படி இருக்கின்றது என்பதையும் ஆராய்ந்து நீங்கள் பயன்படுத்தும் கலர் மற்றும் எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இராசிப்படி தேர்ந்தெடுக்கும்பாெழுது அது நன்றாக உங்களுக்கு உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 28, 2019

இரவு யாக பூஜைகள்


வணக்கம்!
          தற்பொழுது இருந்து இரவு நேர அம்மன் யாகம் நடத்துகிறேன். நமது நண்பர்கள் தங்களுக்கு தேவையான பூஜைகளை செய்வதற்க்கு இரவு நேரத்தில் நடத்தும்படி கேட்டுக்கொள்வதால் இரவு நேர பூஜைகள் நடத்தப்படுகின்றது.

அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் இரவு பூஜைகள் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறேன். பகலில் நடத்துவதை விட இரவில் அம்மன் யாகங்கள் நடக்கும்பொழுது அது அபகரிமான பலனை தரும் கூடுதல் சக்தியோடு வெளிப்படும்.

என்னுடைய வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த பூஜையின் படங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாட்ஸ்அப்பில் என்னை இணைத்துக்கொள்ளுங்கள். எனது வாட்ஸ்அப் எண் 9551155800.

பெரும்பாலும் இரவு அனைத்து யாகங்களையும் நடத்துவது சிறப்பான பலனை தரும் என்பதை நான் பார்த்து இருக்கிறேன். பகலில் யாகம் நடத்துவதற்க்கும் இரவில் நடத்துவதற்க்கும் வித்தியாசம் என்பது இருக்கின்றது. ஆன்மீக வழியில் உள்ளவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்கு தெரியவரும்.

உங்களுக்கும் விஷேச நாட்கள் மற்றும் உங்களின் விருப்பட்ட நாட்களில் சிறப்பு அம்மன் யாகம் நடத்தவேண்டும் என்றால் என்னை தொடர்புக்கொள்ளவும். முன்கூட்டியே இதனை புக்கிங் செய்துக்கொள்ளவும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 27, 2019

மூன்றாவது வீடு பகுதி 1


வணக்கம்!
          மேஷ லக்கனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மிதுனம் இந்த வீட்டில் அதிபதியான புதன் பயந்த சுபாவம் உள்ளவர். இவர் தீயகிரகத்தின் சாரம் பெற்று இருந்தால் இந்த வீடு உங்களுக்கு பலம் பெறுகிறது என்று சொல்லலாம். மறைவீடு தீயகிரகத்தின் கட்டுபாட்டில் இருப்பது நல்லது.

மிதுனத்தில் தீயகிரகங்கள் வந்து அமர்ந்தாலும் நன்றாக தான் இருக்கும். பொதுவாகவே மேஷ லக்கனக்காரர்களுக்கு தைரியம் அதிகம் தான் அது செவ்வாய் கிரகத்தால் வருவது என்றாலும் காலச்சக்கரத்தில் முதல் வீடாக இருப்பதாலும் இந்த தைரியம் வருகின்றது என்று சொல்லலாம்.

ரிஷப லக்கனம் இதற்கு மூன்றாவது வீடாக வருவது கடகம். இந்த வீட்டின் அதிபதி சந்திரன். சந்திரனை பொறுத்தவரை வளர்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுக்கும் தேய்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுப்பதால் அதனை பார்த்து உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

ரிஷப லக்கனத்திற்க்கு தைரியம் நன்றாக இருக்கும் அதற்க்கு சுக்கிரனும் ஒரு காரணமாக இருப்பார். சந்திரனும் நல்ல தொடர்பை இவர்களுக்கு கொடுத்து இந்த வீட்டால் நல்ல பலனை பெறுகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் பிரச்சினை வரும் அது சந்திரன் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்படைந்து இருக்கும்.

சந்திரன் தீயகிரகங்கள் சேர்ந்தால் அது தவறான ஒன்றாக இருந்தாலும் மூன்றாவது வீடாக வருவதால் அது தீயகிரகங்களோடு சேர்வது ஒரு விதத்தில் நன்மை தரும். இதனை பார்த்த நீங்கள் பயப்பட தேவையில்லை. சந்திரன் மிக மோசமாக பாதிப்படைந்து அதனால் பாதிப்பை தரும் நிலையில் மட்டும் பிரச்சினை வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 25, 2019

இசையும் மூன்றாவது வீடும்


வணக்கம்!
          ஒருவர்க்கு இசைமேல் உள்ள ஈடுபாட்டையும் இந்த மூன்றாவது வீடு காண்பிக்கும். இசை மேல் ஒருவர்க்கு ஈடுபாடு வருகின்றது என்றால் அது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. இசையை ஆத்மா கேட்பதால் தான் அதன் மீது ஈடுபாடு வருகின்றது. கடவுளை அடையும் வழியில் இசை முதன்மையாக இருக்கும்.

இசை என்றவுடன் இன்றைய காலத்தில் அனைவரும் காதில் வைத்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் மீது அதிக ஈடுபாடு இருக்குமா என்றால் கண்டிப்பாக அது இருக்கும் என்று சொல்லலாம்.

இளமையில் ஒரு இசைக்கு ஈடுபாடு இருக்கும் கொஞ்சம் இளமையை கடக்கும் நேரத்தில் வேறு விதமான இசைக்கு மனது பிடிக்கும். இது அவர்களின் ஆத்மா கேட்கின்றது என்பதைவிட அவர்களின் சக்தி குறைய குறைய வேறு விதமான இசைக்கு நாட்டம் செல்லும்.

இளமையில் ரஹ்மான் இசையை கேட்டவர்கள் கொஞ்சம் வயது வந்தவுடன் இளையராஜா இசைக்கு மனது தாவும். ஒரு எடுத்துக்காட்டிற்க்கு இதனை சொல்லுகிறேன் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி இசை வேறுபாடு இருக்கும்.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு அதிகமாக இசை மீது பிரியம் ஏற்படுகின்றது. இதுவும் நல்லது தான் அவர்களின் தோஷம் அவ்வாறு கேட்கவைத்து கடவுள் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 24, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          நம்மால் முடியவில்லை என்றால் பிறரால் முடியாது என்று எண்ணி செயல்படவேண்டும் என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு காரியமும் நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும்பொழுது அதனை என்னால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள் நிறைய நீங்கள் செய்து இருப்பீர்கள்.

ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்க்காக நிறைய போராட்ட குணங்களை தருவது மூன்றாவது வீடு. மூன்றாவது வீடு நல்ல பலமாக இருக்கும் நபர்களை பார்த்தால் அவர்கள் எதற்கும் துணிந்து அனைத்து காரியத்தையும் செய்பவராக இருப்பார்கள்.

நமக்கு எதற்க்கு இது எல்லாம் தேவையில்லாத வேலை என்று ஒதுக்கி இருக்கும் நபர்களால் பெரிய சாதனையை ஒன்றும் செய்யவே முடியாது. உங்களின் குடும்ப பொறுப்பைகளை கூட நீங்கள் இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கவேண்டும் நான் இதனை செய்யமுடியும் என்று எண்ணி தொடர்ச்சியாக நிறைய செய்யுங்கள். சிறப்பான ஒரு குடும்ப பொறுப்பாளர்களாக நீங்கள் இருக்கலாம்.

இதனை எல்லாம் ஏன் செய்கிறோம் என்று நினைக்காமல் அனைத்தையும் முடியும் என்று நினையுங்கள். இதனை எல்லாம் மூன்றாவது வீடு தான் செய்கின்றது. மூன்றாவது வீடு பலம் பெற்றால் மட்டுமே அந்த ஆள் சிறப்பாக செயல்படுவார்.

மூன்றாவது வீடு பலம் இழக்கும்பொழுது மட்டுமே ஒருவரால் செயல்பாடு இல்லாமல் போய்விடும். மூன்றாவது வீடு பலம் இழந்த நபர்க்கு செயல்பாடு இல்லாமல் போய்விடுகின்றது. உங்களால் ஒரு காரியம் செய்யமுடியவில்லை என்றால் மூன்றாவது வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 23, 2019

உங்களின் துணை இளைய சகோதரத்தோடு


வணக்கம் !   
                  இளைய சகோதரத்தைப்பற்றி நாம் சொல்லவேண்டிய ஒரு இடத்தில் நாம் இதனையும் சொல்லவேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதால் இதனை சொல்லுகிறேன். இது அனைவருக்கும் நடக்கும் என்பது கிடையாது. ஒரு சிலருக்கு நடக்கலாம்.

          மூன்றாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டு அதிபதியோடு சேர்ந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு ஒரு நட்பை வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் உங்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதியும் உங்களின் ஏழாவது வீட்டு அதிபதியும் கூடவே மூன்றாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு தவறான கூட்டணியில் இருப்பார்.

மூன்றாவது வீட்டு அதிபதியோடு ஏழாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து அதோடு உங்களின் இரண்டாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதுவும் உங்களின் துணையின் மீது சந்தேகத்தை உருவாக்கிவிடும். உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு சேர்ந்துவிடுவார்

மூன்றாவது வீட்டு அதிபதி என்பது ஒரு மறைவுவீட்டு அதிபதி என்பதால் கெடுதலான குணத்தை கொடுத்துவிடுகின்றது. அப்பொழுது நாம் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும் என்பதால் அதனைப்பற்றி சொல்லுகிறேன்.

இதனை தவிர்ப்பதற்க்கு நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் போதுமானது என்று சொல்லுகிறேன். ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது இதனை தவிர்ப்பதற்க்கு அவர்கள் இணைவது போல நீங்கள் சூழ்நிலையை உருவாக்கிவிடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 22, 2019

அண்ணன் தம்பி


வணக்கம்!
          தற்பொழுது ஒருவருக்கு ஒரு யாகம் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் பதிவுகள் குறைந்து வருகின்றன. தொடர்ச்சியான பதிவுகளை எப்படியும் கொடுத்துவிடுவோம் ஆனால் இந்த நேரத்தில் யாகத்தில் கவனத்தை செலுத்தி செய்துக்கொண்டு இருக்கும்பொழுது அதற்கே நேரம் போய்விடுகின்றது.

நேற்று அண்ணன் தம்பியை பற்றி எழுதியவற்றைப்பற்றி நிறைய பேர் தொடர்புக்கொண்டு கேட்டார்கள். எங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கும்.

நூற்றில் ஒருவர் நன்றாக இருந்தால் அதுவே பெரிய ஒரு அதியசமாகவே இருக்கும். பல குடும்பங்களில் அண்ணன் தம்பிகளில் ஒருவர் தான் வாழ்க்கின்றார்கள். ஒருவர் ஒன்றுக்கும் உதவாமல் சென்றுவிடுகின்றனர்.

ஒரு அண்ணன் ஒரு தங்கச்சி இருந்தால் பரவாயில்லை ஒரளவு நன்றாக வாழ்ந்துவிடுவார்கள். அண்ணன் தம்பி இருந்தால் தான் பிரச்சினை இருக்கும் என்பது மட்டும் உண்மை. அண்ணன் தம்பி இருவரில் இருவரும் நன்றாக இருந்தால் அது பெரிய பாக்கியமாகவே இருக்கும்.

இதற்கு வழி என்ன என்றும் கேட்டார்கள். பொதுவாகவே அனைத்திற்க்கும் விடையை சொல்லிவிடமுடியாது அதற்கு காரணம் பல இருக்கின்றன. ஜாதககதம்பத்தை தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள் இதற்கு வழியை நானே செய்துவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு