வணக்கம் !
இளைய சகோதரத்தைப்பற்றி நாம் சொல்லவேண்டிய ஒரு இடத்தில் நாம் இதனையும் சொல்லவேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதால் இதனை சொல்லுகிறேன். இது அனைவருக்கும் நடக்கும் என்பது கிடையாது. ஒரு சிலருக்கு நடக்கலாம்.
மூன்றாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டு அதிபதியோடு சேர்ந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு ஒரு நட்பை வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் உங்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதியும் உங்களின் ஏழாவது வீட்டு அதிபதியும் கூடவே மூன்றாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு தவறான கூட்டணியில் இருப்பார்.
மூன்றாவது வீட்டு அதிபதியோடு ஏழாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து அதோடு உங்களின் இரண்டாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதுவும் உங்களின் துணையின் மீது சந்தேகத்தை உருவாக்கிவிடும். உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு சேர்ந்துவிடுவார்
மூன்றாவது வீட்டு அதிபதி என்பது ஒரு மறைவுவீட்டு அதிபதி என்பதால் கெடுதலான குணத்தை கொடுத்துவிடுகின்றது. அப்பொழுது நாம் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும் என்பதால் அதனைப்பற்றி சொல்லுகிறேன்.
இதனை தவிர்ப்பதற்க்கு நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் போதுமானது என்று சொல்லுகிறேன். ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது இதனை தவிர்ப்பதற்க்கு அவர்கள் இணைவது போல நீங்கள் சூழ்நிலையை உருவாக்கிவிடகூடாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment