Followers

Wednesday, May 29, 2019

இராசிபடி கலர் மற்றும் எண்


வணக்கம்!
          நம்முடைய வாகனம் மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு உங்களின் இராசிபடி அமையவேண்டும். நீங்களே மறுத்தாலும் உங்களின் இராசிப்படி அந்த கலர் உங்களுக்கு அமைந்துவிடும்.

ஒரு கார் வாங்கினாலும் அதில் உள்ள கலர் உங்களின் இராசிபடி அமையும் அல்லது உங்களின் இராசிக்கு உகந்தபடி அந்த கலர் அமைந்துவிடுவது உண்டு. இப்படி அமைந்தால் பெரும்பாலும் உங்களுக்கு இது நல்லதாக அமைந்துவிடும்.

ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் மிகுந்த பலத்தோடு தசாவை நடத்தும் அவர்களுக்கு அந்த தசாநாதன் எந்த கலரில் வருகின்றாரோ அந்த கலரில் அமைந்துவிடுவது உண்டு. ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் வலுவாக அமைந்துவிடுகின்றது.

உங்களுக்கு அமையும் எண் கூட இராசிப்படி அமைந்தால் அது உங்களுக்கு நல்லதை தருகின்றது. பலருக்கு எட்டாவது எண் என்றால் பிடிக்காது ஆனால் சனியை இராசி அதிபதியாக கொண்டவர்களுக்கு இந்த எட்டாவது எண் மிகுந்த இராசியாக அமையும்.

உங்களின் இராசிபடியும் மற்றும் உங்களின் தசாநாதன் எப்படி இருக்கின்றது என்பதையும் ஆராய்ந்து நீங்கள் பயன்படுத்தும் கலர் மற்றும் எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இராசிப்படி தேர்ந்தெடுக்கும்பாெழுது அது நன்றாக உங்களுக்கு உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: