Followers

Monday, May 27, 2019

மூன்றாவது வீடு பகுதி 1


வணக்கம்!
          மேஷ லக்கனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மிதுனம் இந்த வீட்டில் அதிபதியான புதன் பயந்த சுபாவம் உள்ளவர். இவர் தீயகிரகத்தின் சாரம் பெற்று இருந்தால் இந்த வீடு உங்களுக்கு பலம் பெறுகிறது என்று சொல்லலாம். மறைவீடு தீயகிரகத்தின் கட்டுபாட்டில் இருப்பது நல்லது.

மிதுனத்தில் தீயகிரகங்கள் வந்து அமர்ந்தாலும் நன்றாக தான் இருக்கும். பொதுவாகவே மேஷ லக்கனக்காரர்களுக்கு தைரியம் அதிகம் தான் அது செவ்வாய் கிரகத்தால் வருவது என்றாலும் காலச்சக்கரத்தில் முதல் வீடாக இருப்பதாலும் இந்த தைரியம் வருகின்றது என்று சொல்லலாம்.

ரிஷப லக்கனம் இதற்கு மூன்றாவது வீடாக வருவது கடகம். இந்த வீட்டின் அதிபதி சந்திரன். சந்திரனை பொறுத்தவரை வளர்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுக்கும் தேய்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுப்பதால் அதனை பார்த்து உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

ரிஷப லக்கனத்திற்க்கு தைரியம் நன்றாக இருக்கும் அதற்க்கு சுக்கிரனும் ஒரு காரணமாக இருப்பார். சந்திரனும் நல்ல தொடர்பை இவர்களுக்கு கொடுத்து இந்த வீட்டால் நல்ல பலனை பெறுகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் பிரச்சினை வரும் அது சந்திரன் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்படைந்து இருக்கும்.

சந்திரன் தீயகிரகங்கள் சேர்ந்தால் அது தவறான ஒன்றாக இருந்தாலும் மூன்றாவது வீடாக வருவதால் அது தீயகிரகங்களோடு சேர்வது ஒரு விதத்தில் நன்மை தரும். இதனை பார்த்த நீங்கள் பயப்பட தேவையில்லை. சந்திரன் மிக மோசமாக பாதிப்படைந்து அதனால் பாதிப்பை தரும் நிலையில் மட்டும் பிரச்சினை வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: