வணக்கம்!
ஒருவர்க்கு இசைமேல் உள்ள ஈடுபாட்டையும் இந்த மூன்றாவது வீடு காண்பிக்கும். இசை மேல் ஒருவர்க்கு ஈடுபாடு வருகின்றது என்றால் அது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. இசையை ஆத்மா கேட்பதால் தான் அதன் மீது ஈடுபாடு வருகின்றது. கடவுளை அடையும் வழியில் இசை முதன்மையாக இருக்கும்.
இசை என்றவுடன் இன்றைய காலத்தில் அனைவரும் காதில் வைத்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் மீது அதிக ஈடுபாடு இருக்குமா என்றால் கண்டிப்பாக அது இருக்கும் என்று சொல்லலாம்.
இளமையில் ஒரு இசைக்கு ஈடுபாடு இருக்கும் கொஞ்சம் இளமையை கடக்கும் நேரத்தில் வேறு விதமான இசைக்கு மனது பிடிக்கும். இது அவர்களின் ஆத்மா கேட்கின்றது என்பதைவிட அவர்களின் சக்தி குறைய குறைய வேறு விதமான இசைக்கு நாட்டம் செல்லும்.
இளமையில் ரஹ்மான் இசையை கேட்டவர்கள் கொஞ்சம் வயது வந்தவுடன் இளையராஜா இசைக்கு மனது தாவும். ஒரு எடுத்துக்காட்டிற்க்கு இதனை சொல்லுகிறேன் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி இசை வேறுபாடு இருக்கும்.
மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு அதிகமாக இசை மீது பிரியம் ஏற்படுகின்றது. இதுவும் நல்லது தான் அவர்களின் தோஷம் அவ்வாறு கேட்கவைத்து கடவுள் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment