வணக்கம்!
நம்மால் முடியவில்லை என்றால் பிறரால் முடியாது என்று எண்ணி செயல்படவேண்டும் என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு காரியமும் நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும்பொழுது அதனை என்னால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள் நிறைய நீங்கள் செய்து இருப்பீர்கள்.
ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்க்காக நிறைய போராட்ட குணங்களை தருவது மூன்றாவது வீடு. மூன்றாவது வீடு நல்ல பலமாக இருக்கும் நபர்களை பார்த்தால் அவர்கள் எதற்கும் துணிந்து அனைத்து காரியத்தையும் செய்பவராக இருப்பார்கள்.
நமக்கு எதற்க்கு இது எல்லாம் தேவையில்லாத வேலை என்று ஒதுக்கி இருக்கும் நபர்களால் பெரிய சாதனையை ஒன்றும் செய்யவே முடியாது. உங்களின் குடும்ப பொறுப்பைகளை கூட நீங்கள் இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கவேண்டும் நான் இதனை செய்யமுடியும் என்று எண்ணி தொடர்ச்சியாக நிறைய செய்யுங்கள். சிறப்பான ஒரு குடும்ப பொறுப்பாளர்களாக நீங்கள் இருக்கலாம்.
இதனை எல்லாம் ஏன் செய்கிறோம் என்று நினைக்காமல் அனைத்தையும் முடியும் என்று நினையுங்கள். இதனை எல்லாம் மூன்றாவது வீடு தான் செய்கின்றது. மூன்றாவது வீடு பலம் பெற்றால் மட்டுமே அந்த ஆள் சிறப்பாக செயல்படுவார்.
மூன்றாவது வீடு பலம் இழக்கும்பொழுது மட்டுமே ஒருவரால் செயல்பாடு இல்லாமல் போய்விடும். மூன்றாவது வீடு பலம் இழந்த நபர்க்கு செயல்பாடு இல்லாமல் போய்விடுகின்றது. உங்களால் ஒரு காரியம் செய்யமுடியவில்லை என்றால் மூன்றாவது வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment