Followers

Wednesday, May 9, 2012

திருமண வாழ்க்கை 2



வணக்கம் நண்பர்களே திருமண வாழ்க்கை என்ற கடந்த பதிவில் திருமணத்திற்க்கு தடை மற்றும் பிரச்சினைகளை பார்த்துவந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்பதிவிலும் திருமண விஷயத்தைப் பற்றி பார்க்கலாம்.

என்னிடம் ஒரு வெளிநாட்டில் இருப்பவர் ஒருவர் தன்னுடைய மகளுக்கு  ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவர் தமிழர் தான். அவருடைய பெண்  ஜாதகத்தை காண்பித்தார். அந்த பெண்னுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளது. அவரின் கணவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்கிறார். அவர்களின் திருமண வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக ஒரு குழந்தை ஒன்று உள்ளது.

திருமண வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த நிலையில் அவர்களின் வாழ்க்கையில் புயல் வந்தது இருவருக்கும் தினமும் சண்டை நடந்தது இந்த நிலை முற்றி அவன் தனியாக சென்று வசித்துவந்தான். கொஞ்ச நாள்கள் எல்லாம் அவன் விவாகரத்து கேட்டு இந்த பெண்ணிற்க்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டான் விவாகரத்தும் கிடைத்துவிட்டது.

அந்த பெண் ஜாதகத்தில் லக்கினத்தில் சனி பகவான் அமர்ந்து இருந்தார். அந்த பெண்ணின் கணவன் இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை குழந்தையை நான் வளர்க்கமாட்டேன் என்று கூறிவிட்டான். அதனால் தாயாருடன் தான் குழந்தை வளர்கிறது.

ஏழாம் அதிபதி நன்றாகதான் இருக்கிறார் ஆனால் லக்கினத்தில் இருந்து சனி ஏழாம் வீட்டை பார்த்ததால் திருமண வாழ்க்கையில் இப்படி பிரச்சினையை உண்டு செய்துவிட்டார். பொதுவாக லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டை பார்ப்பது பிரச்சினையை உண்டு செய்துவிடும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை உருவாக்கிறது.

திருமண வாழ்கைக்கு மிக பெரிய உதவி செய்யும் வீடு இரண்டாம் வீடு. குடும்ப ஸ்தானம் என அழைக்கப்படும் இடம் அதனால் இந்த வீட்டையும் நன்றாக கவனிக்க வேண்டும். நமக்கு திருமணம் நடைபெறும் போது என்ன நடக்கும் நமது குடும்பத்திற்க்கு புதிதாக ஒருவர் வரவேண்டும். அப்பொழுது அந்த குடும்பத்தில் ஒரு நபர் கூடுதலாகிறார் என்று அர்த்தம். புதியதாக ஒருவர் வர வேண்டும் என்றால் குடும்பஸ்தானம் அவரை அனுமதிக்க வேண்டும். இரண்டாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்தால் அந்த நபரை அனுமதிக்காது .அனுமதி அளித்தால் தானே திருமணம் நடைபெறும். இது திருமணம் செய்வதற்க்கு முன்பே நமக்கு அடிக்கும் ஆப்பு.

பெண்களாக இருந்து இந்த வீட்டில் தீயகிரகங்கள் அமர்ந்தால் அவ்வளவுதான் இங்கு அமர்ந்து கொண்டு எட்டாம் வீட்டை பார்ப்பார்கள். பெண்களுக்கு எட்டாம் வீடு என்பது மாங்கலிய பாக்கியம் தரும் வீடு. மாங்கலியத்திற்க்கு பிரச்சினை பெண்களை பொருத்தவரை மாங்கலிய பாக்கியம் இருந்தால் தான் கட்டும் தாலி நிலைக்கும். எட்டாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் மாங்கலியத்தை பறித்துவிடும் இரண்டாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டை தீயகிரகங்கள் பார்த்தால் கணவன் வாழ்நாள்கள் குறைந்துவிடும்.

கடவுள் பெண்களுக்கு சிறந்த பக்தியை வைத்திருக்கிறார் அதனால் தான் பல பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். நான் பல குடுபங்களை பார்த்து இருக்கிறேன் அவர்களின் ஜாதகங்களில் நிறைய பிரச்சினை இருந்தும் அந்த வீட்டின் இல்லறதலைவி நன்றாக ஆன்மீகத்தில் ஈடுபாட்டுடன் இருந்தால் எந்த பிரச்சினையும் வராது.

ஒரு ஆண் மகன் சாமி கும்பிடுவதற்க்கும் ஒரு பெண் சாமி கும்பிடுவதற்க்கும் நிறைய வேறுபாடு உள்ளது. பெண்கள் சாமி கும்பிட்டு வேண்டினால் அந்த பிரத்தனையை கடவுள் உன்னிப்பாக கேட்கிறார் என்று தோன்றுகிறது அதை நிறைவேற்றி வைக்கிறார்.

ஒரு ஆண் ஒரு குலத்தெய்வத்தை மட்டும் தான் வணங்குகிறோம் ஆனால் ஒரு பெண் இரண்டு குலத்தெய்வத்தை வணங்குகிறாள். பிறந்த வீட்டில் ஒரு குலதெய்வம் புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் என்று இரண்டு குலதெய்வத்தை வணங்குகிறாள். உங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை என்றால் உங்கள் வீட்டில் உள்ள பெண்களை கடவுளிடம் வேண்ட சொல்லுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

தொடரும்...

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

seethalrajan said...

ஐயா வணக்கம் பாடங்கள் நன்றாக உள்ளது. துலா லக்னம் 1ல் கேது 2ல் சனி 7ல்‍ ராகு. இப்படி இருந்தால் இரண்டு திருமணம்தானா? சுக்கிரன் 9ல், குரு 5ல் இருந்து லக்னத்தை பார்கிறார் அதலால் 28 வயதுக்கு பிறகு திருமணம் செய்தால் நல்லதா?

rajeshsubbu said...

//* seethalrajan said...
ஐயா வணக்கம் பாடங்கள் நன்றாக உள்ளது. துலா லக்னம் 1ல் கேது 2ல் சனி 7ல்‍ ராகு. இப்படி இருந்தால் இரண்டு திருமணம்தானா? சுக்கிரன் 9ல், குரு 5ல் இருந்து லக்னத்தை பார்கிறார் அதலால் 28 வயதுக்கு பிறகு திருமணம் செய்தால் நல்லதா? *//
வணக்கம் 28 வயதுக்கு பிறகு திருமணம் செய்தால் நல்லது தான்.