கடந்த வாரம் தஞ்சாவூருக்கு சென்று இருந்தேன். அங்கு சென்ற வந்ததை ஒரு பதிவாக போடலாம் என்று நினைத்து இருந்தேன் இன்று தான் அதற்கு நேரம் வந்தது.
தஞ்சாவூரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தேன் அங்கு சில சோதிட வாடிக்கையாளர்களை ஒரு நாள் சந்தித்துவிட்டு ஒரு நாள் ஒரு குடும்பத்தின் குலதெய்வ பூஜை நடத்தினார்கள் அதில் கலந்துக்கொண்டேன். குலதெய்வ பூஜை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அல்லது பங்காளிகள் ஒன்று கூடி நடத்துவது ஆகும்.
இது குடும்ப ஒற்றுமைக்கும் மிக பெரிய வரப்பிரசாதமாக அமைகிறது. இந்த பூஜை ஒரு சில குடும்பங்களில் பகலில் நடத்துகிறார்கள் ஒரு சில குடும்பங்களில் இரவு முழுவதும் நடத்துகிறார்கள். அது அந்த குலதெய்வத்தின் வழக்கபடி அமைகிறது.
இந்த பூஜையின் அவசியம் என்ன என்றால் உங்களுக்கு தீராத பிரச்சினைகள் இருந்தால் அதை தீர்த்துவைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உங்கள் குலதெய்வம்.அதனை நாம் வணங்காமல் இருக்கலாமா.
நீங்கள் சோதிடர்களிடம் சென்றால் குலதெய்வத்தை வழிபடுங்கள் அனைத்தும் சரியாகும் என்று கூறுவார்கள். முக்கால் வாசி சோதிடர்கள் இந்த விஷயத்தில் காலைவாரிவிடுவார்கள். அவர்களால் குலதெய்வ குறைகளை கண்டறிய மாட்டார்கள். நீங்கள் என்ன என்னமோ பரிகாரம் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் பரிகாரம் எடுபடாது.
எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும்.இதை நான் எனது சோதிட வாடிக்கையாளருக்கு சொல்லும் முதல் செய்தியாகும்.
ஒரு சில குடும்பங்களில் சண்டை சச்சரவு காரணமாக குலதெய்வ பூஜை நிறுத்திவிடுவார்கள் அவ்வாறு நிறுத்தகூடாது கூடியவரை நீங்கள் சமாதானம் செய்து நடத்தப்பாருங்கள் நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது.
ஒரு சில இடங்களில் குலதெய்வத்தை ஒருமுறை மட்டும் தான் கும்பிடுவார்கள் அதற்கு பிறகு அதை கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால் குலதெய்வத்தை ஒரு முறை தான் கும்பிட வேண்டும் என்று இவர்களாகவே ஒரு சட்டம் இயற்றிக்கொண்டு கும்பிடமாட்டார்கள் அவ்வாறு ஒன்றும் கிடையாது. தாராளமாக கும்பிடலாம்.
ஒவ்வொரு மனிதனும் இன்றைய இருக்கின்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி அவர்களின் குலத்தெய்வத்தை வணங்குவது தான். உங்களுக்கு உங்கள் குலதெய்வம் நல்ல அருள் வழங்குதா அல்லது அந்த அருள் இல்லையா என்று பார்க்க சோதிடத்தில் ஐந்தாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் வைத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் ஒரு முறை சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சில பேர் குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று அங்கு போய் பழைய நண்பர்களுடன் உல்லாசமாக தண்ணி அடித்துவிட்டு அந்த பூஜையில் கலந்து கொள்ளாமல் வந்துவிடுவார்கள் அவ்வாறு செய்வது தவறு. அங்கு நடக்கும் பூஜை சில நேரம் விடிய விடிய நடக்கும் தூங்காமல் கண் விழித்து சாமி தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் வெளியூரில் இருந்தால் மாதம் ஒரு முறை சென்று வாருங்கள் அவ்வாறு சென்று வரமுடியவில்லை என்றால் அந்த கோவிலுக்கு ஒரு குறிபிட்ட தொகை அனுப்பி அங்கு உள்ளவர்களை சாமி கும்பிட்டு பிரசாதத்தை உங்களுக்கு அனுப்ப சொல்லுங்கள்.
குலதெய்வ வழிபாடு உங்களுடைய நட்சத்திரம் வரும் நாட்களில் கும்பிடலாம் அவ்வாறு இல்லை என்றால் பௌர்ணமி அல்லது அமாவாசை அன்று செய்யலாம். நாம் மற்ற தெய்வத்தை பொருத்தவரை அர்ச்சனை செய்து சாமி கும்பிடுவோம் ஆனால் குலதெய்வத்திற்க்கு பொங்கல் வைத்து சாமி கும்பிடவேண்டும்.
இப்பொழுது பல ஊர்களில் இந்த மாதம் அடுத்த மாதம் குலதெய்வ பூஜை நடைபெறும் எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாக உள்ளது அதனால் போய் வர முடியாது என்று நீங்கள் நினைத்து கொண்டு இருக்காமல் சென்று வாருங்கல் நல்லது நடக்கும். பல விபத்துக்களில் இருந்து உங்களை காப்பாற்றியது உங்கள் குலதெய்வமாக தான் இருக்கும். அதை மனதில் வையுங்கள்.
சில நேரங்களில் நாம் புண்ணிய தல தரிசனம் செய்ய செல்வோம் அப்பொழுது நீங்கள் குலதெய்வத்தை சாமி கும்பிட்டு தான் செல்ல வேண்டும் அவ்வாறு செல்லவில்லை என்றால் அங்கு போய் ஒரு புண்ணியமும் உங்களுக்கு கிடைக்காது. நீங்கள் எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் உங்கள் வீட்டு குலதெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள்.
உங்களுக்கு எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வ வழிபாட்டை தொடருங்கள் அது அனைத்து தோஷத்தையும் போக்க கூடியது. குலதெய்வ வழிபாடு தான் முதலில் அடுத்த பரிகாரங்கள் எல்லாம் பிறகுதான் என்பதை மனதில் வையுங்கள். நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Thanks for your information
This post is really great
Post a Comment