வணக்கம் நண்பர்களே நாம் ஆறாம் வீட்டு தசாவைப்பற்றி பார்த்தபோது பல நண்பர்கள் என்னிடம் கேட்டார்கள் நீங்கள் ஆறாம் வீட்டு தசாவைப் பற்றி நடத்திக்கொண்டு இருக்கிறீர்கள் ஆனால் ஒவ்வொரு கிரகத்தின் தசா நாட்களை சொல்லி அது எவ்வாறு பலனை தரும் என்று கேட்டார்கள். முதலில் அனைத்து தசாவையும் அது எவ்வாறு பலன் தருவதையும் தெரிந்துக்கொள்ளுங்கள் பிறகு ஒவ்வொரு கிரகத்தையும் எடுத்துக்கொண்டு அதன் தசா பலனை பார்க்கலாம் என்றும் சொல்லிருந்தேன்.
நான் ஆறாம் வீட்டு தசாவை எழுதும்போதே அனைத்தையும் எழுதிவிடவேண்டும் குறைந்தது 500 பதிவு நாளும் போடவேண்டும் நினைத்து இருந்தேன் ஆனால் பதிவுக்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் பிறகு எழுதலாம் என்று முடிவு எடுத்து முடித்துக்கொண்டேன். நீங்கள் ஆச்சரியபடலாம் என்னது இவ்வளவு பதிவுகளா என்று கண்டிப்பாக அவ்வளவு பதிவுகள் எழுதினால் கூட அனைத்து சோதிட விசயங்களும் சொல்லிவிடமுடியாது . பிற்காலத்தில் நாம் பார்க்கலாம் கடவுளும் அருள் புரிவார் என்ற நம்பிக்கையில்.
நாம் அடுத்ததாக பார்க்க போவது ஏழாம் வீட்டு தசாவை தான் பல காலங்களுக்கு முன்பு மனிதன் ஜாதகத்தை கையில் எடுத்ததே அவன் திருமணத்திற்க்கு தான் இருக்கும் இன்றும் பல பேர் வாழ்க்கையில் அப்படி தான் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் பல பேர் இன்று அனைத்திற்க்கும் ஜாதகத்தை பார்த்து தான் முடிவு செய்கிறார்கள்.
அதனால் நமது பதிவுக்கு வரும் நண்பர்கள் பல பேர் திருமண ஆகாதவர்களாக இருப்பார்கள். சிலர் திருமணம் முடித்தவர்களாக இருப்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த தசா மூலம் பல நன்மைகள் பல நல்ல கருத்துக்களை தரலாம் என்று நினைத்து இந்த தசாவை நடத்தலாம் என்று முடிவு எடுத்துதேன். திருமணம் ஆனாவர்களும் இதனை படிக்கலாம் ஏன் என்றால் திருமணத்திற்க்கு மட்டும் இல்லை ஏழாவது வீடு பல தகவல்கள் உள்ளடங்கியது தான் ஏழாம் வீடு.அந்த விசயங்கள் உங்களுக்கு பயன்படும்.
முதலில் திருமணத்தைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். ஏன் கொஞ்சம் பார்க்கலாம் நிறையவே பார்க்கலாமே என்று நீங்கள் கேட்கலாம் அந்த அளவு பார்ப்பதற்க்கு எனக்கு வயது கிடையாது. நானும் திருமணம் ஆகாதவன் தான்.
சமுதாயத்தில் ஒரு நிலைக்கு பிறகு மனிதனால் தனியாக வாழமுடியவில்லை அதற்காக அவன் இன்னொரு துணையை தேர்ந்துடுக்கிறான் அவள் அல்லது அவனுடன் வாழ்க்கையின் பின் பகுதியை கழிக்கிறான் என்று சொல்லலாம் அல்லது அவனின் இரத்தம் இந்த பூமியில் தொடர்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்து திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறான்.
சில பேர் சொல்லுவார்கள் திருமணம் என்பது கடமை அதனால் அதனை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று சொல்லி திருமணத்தை செய்துகொள்வார்கள். மனிதனின் நாகரிகத்து வளர்ச்சியில் அவனின் கடைசி கண்டுபிடிப்பாக கூட திருமணம் இருக்கலாம். இதைப்பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
திருமணத்தைப்பற்றி பல பேர் அச்சத்துடன் தான் பார்க்கிறார்கள். திருமணம் முடிந்தால் சுதந்திரம் போய்விடுமோ என்றும் நினைக்கிறார்கள். அதற்கு அவர்கள் திருமணத்தை தள்ளி போட்டுவிட்டு் ஆன்மீகத்தில் நுழைந்துவிடுகிறார்கள்.
இப்படியே ஆன்மிகத்தில் போய்விடலாம் என்று நினைத்துக்கொண்டு ஆன்மிகவாழ்வு வாழலாம் என்று நினைத்துக்கொண்டு சன்யாசியாக வாழ்க்கையை நடத்த தொடங்கிவிடுகிறார்கள். சன்யாசி ஆனாவுடன் சும்மா இருக்கிறது இல்லை நீங்கள் வாழும் வாழ்க்கை போலியானது. இல்லறத்தில் ஈடுபட வேண்டாம் வந்துவிடுங்கள் நீங்கள் கடவுளுடன் வாழுங்கள் என்று சொல்லி நல்ல வாழ்ந்து கொண்டு இருப்பவனை கெடுக்கிறது.
நான் ஒன்று கேட்கிறேன் கடவுள் மனிதனுக்கு மட்டும் தான் சொந்த பந்தங்கள் அவர்களுடன் நன்றாக பழகி வாழலாம் என்று ஒரு அறிவை வைத்து இருக்கிறான். ஆடு மாடுகளுக்கு இப்படி இல்லை. இந்த சாமியார்கள் என்னடா என்றால் ஐந்தறிவு ஜீவன்கள் மாதிரி தனியாக ஊர் சுத்திக்கிட்டு அவனும் கெட்டு அடுத்தவனையும் கெடுக்கிறது. பல பேர் இதனை விரும்புவதால் நான் சொன்னேன்.
நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்க்க போகிறோம் அதில் நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் நான் படித்த மற்றும் என்னுடைய அனுபவங்களை தரபோகிறேன் இந்த ஏழாம் வீடு உங்களின் வாழ்க்கை துணையை அதிகம் பிரதிபலிக்கின்ற ஒரு வீடு அதனால் நீங்கள் உங்கள் ஜாதகத்தை வைத்துக்கொண்டு எனக்கு வரும் அவள் அல்லது அவன் இப்படிதான் இருப்பார் என்று முடிவு எடுத்து பிரச்சினையை வளர்த்து கொள்ளாதீர்கள் திருமணம் முடிந்தவர்கள் உங்களின் கணவன் அல்லது மனைவியை சந்தேகம் கொள்ளாதீர்கள். இந்த வீட்டை பொருத்தவரை நீங்கள் ஒரு பார்வையாளராக இருங்கள்.
எப்பொழுது ஒருவன் தன் மனைவி அல்லது கணவனின் திருமணத்திற்க்கு முன் வாழ்க்கையை பார்க்கிறார்களோ அவர்கள் நன்றாக வாழ்க்கையை நடத்தியது இல்லை. திருமணத்திற்க்கு முன்பு அவர்கள் எப்படி இருந்தாலும் அதனை விட்டுவிட்டு திருமணத்திற்க்கு பின்பு மகிழ்ச்சியோடு குடும்பத்தை நடத்துங்கள்.
திருமணத்திற்க்கு முன்பு ஒருவரின் வாழ்க்கையை பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக நிம்மதி போய்விடும். அதனால் நீங்கள் இந்த பாடங்களை படித்துவிட்டு இவள் இப்படி தானா என்று நினைத்துவிடாதீர்கள். அனைத்து மனிதர்களின் வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் கடவுள் கொடுத்தது தான் அவர்களின் மேல் எந்த தவறும் இல்லை.
உங்கள் மனைவியாக வந்தவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து இருக்கலாம் அது உங்களுக்கு தெரியவரலாம். அதனை நீங்கள் ஒருபோதும் காட்டிக்கொள்ளாதீர்கள். கிடைத்த சின்ன வாழ்க்கையை மகிழ்வுடன் நடத்த வழி பாருங்கள். எந்த செயலும் கடவுளின் விதி படிதான் நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஏன் உங்களுக்கு தெரியும் என்று நான் சொல்லுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் சோதிடராக வேண்டும் என்று இந்த பதிவுக்கு வருபவர்கள். சோதிடத்தின் அடிப்படை விதியே கடவுளின் விதிதான் என்பதை ஒரு நாளும் மறக்ககூடாது.
கடவுள் அவன் அல்லது அவளின் ஜாதகத்தில் இப்படி எழுதி உள்ளான் அதனை தவிர்க்க கடவுள் உங்களை சோதிடராக மாற்றிவிட்டார். அதற்கு வழி என்ன என்று பார்த்து அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள். உங்களின் துணையுடன் நன்றாக வாழ கடவுள் அனைத்து வழியும் ஏற்படுத்திக்கொடுப்பார். அனைவரின் நலம் கருதி தான் நான் பதிவுகளை தருவேன். சோதிடத்தின் மிகபெரிய விஷயம் என்ன என்றால் அது எப்படியாவது தன்னை வெளிபடுத்திக்கொள்ளும். அதனால் உங்களுக்கு இந்த அறிவுரையை தருகிறேன்.
மனதின் மிகபெரிய தந்திரம் என்ன என்றால் இதை பார்க்ககூடாது என்று நீங்கள் நினைத்தால் உங்களின் மனது அதனை தான் பார்க்க துண்டும். நீங்கள் நல்லவராக இருந்தால் உங்களின் வாழ்க்கை துணை மீது உங்களின் பார்வை அன்பு கலந்து தான் இருக்கும். உங்கள் துணைவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்துக்கொண்டு நீ இப்படி தானா என்று அவரிடம் சண்டை போட ஆரம்பித்துவிடாதீர்கள்.
அனைத்து விதியும் பொதுவானவை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.