நாம் ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வருகிறோம் இப்பதிவில் கன்னி லக்கினத்திற்க்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம். கன்னி லக்கினத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது மீன ராசி. கன்னி லக்கினத்தின் அதிபதி புதன் மீன லக்கினத்தின் அதிபதி குரு.
கன்னி லக்கினத்தை கொண்டவர்களுக்கு அமையும் வரன் நல்ல குடும்பத்தில் இருந்து வரலாம். உயர் குலத்தில் இருந்து வருவார். அப்படி இல்லை என்றால் அவர்களின் குணாதிசயங்கள் அவர்களே போல் இருக்கும்.
கோவிலுக்கு அருகில் வீடு இருக்கும். வீட்டில் எந்த நேரமும் பூஜை செய்யவார். இவர்கள் பணிபுரியும் இடம் கோவிலாக இருக்கும். அறநிலையத்துறையில் பணிபுரிவார். நீதிமன்றம் பொதுநல அமைப்பு போன்றவற்றில் பணிபுரிவார்.
இவர்கள் நீதிபடிதான் நடக்க வேண்டும் என்று சொல்வார். பெரியோரை மதித்து நடப்பார். அடுத்தவர்களிடம் அளவு கடந்த கருணை வைப்பார். எதிர்காலத்தை பற்றி அதிக திட்டம் வைத்திருப்பார். அடுத்தவரைப் பற்றி தன் நிலையில் வைத்து எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பார்.
தேவையில்லாமல் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் அடுத்தவர்களிடம் எரிச்சலை வாங்கிக் கொள்வார். இவர் சொல்லுவதை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்று நினைப்பார்.
அதிகமாக புண்ணிய யாத்திரை செல்வதில் இவரின் மனம் ஈடுபடும். அனைத்து கோவிலுக்கும் செல்வதை ஒரு வேலையாகவே இவருக்கு இருக்கும்.
என்ன கன்னி ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படி இருந்தால் இவர் தான் உங்களின் வாழ்க்கை துணையாக வருபவர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment