Followers

Monday, August 6, 2012

சந்திரன் பரிகாரம்




வணக்கம் நண்பர்களே ஆறாம் வீட்டு தசாவின் பரிகாரங்களை பார்த்து வருகிறோம். நமது பதிவு வரும் நண்பர்களுக்கு ஆறாம் வீடு சம்பந்தப்பட்டு தசா நடைபெறவில்லை என்று நினைக்கிறேன். யாரும் எனக்கு இந்த மாதிரி பிரச்சினை இருக்கிறது என்று கேள்வி கேட்கவில்லை.

கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை ஏற்படுவது எல்லாம் இந்த வீட்டின் மூலம் தான் ஏற்படும் உங்களுக்கு அது தெரியவில்லை நன்றாக உங்கள் ஜாதகத்தை அலசி பாருங்கள் தெரியவரும்.

பல இடங்களில் நில தகராறு இருக்கிறது எல்லாம் கோர்ட்டில் நிலுவையாக உள்ளது அந்த மாதிரி நடைபெறுவதும் இந்த வீட்டின் மூலம் தான் என்பதை நினைவில் வையுங்கள். சொத்து இப்பவருமா அல்லது அப்பவருமா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் உங்கள் ஜாதகத்தை பார்த்து கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆறாம் வீட்டில் சந்திரன் சம்பந்தப்பட்டு தசா நடைபெறும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு என்ன பரிகாரம் என்று பார்க்கலாம்.

சந்திரனுக்கு நல்ல பரிகாரம் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லுவது தான் சிறந்த பரிகாரம். பௌர்ணமி அன்று நிலவொளியில் மலையை சுற்றினால் நல்லது. உங்களால் திருவண்ணாமலை செல்ல முடியவில்லை என்றால் உங்கள் ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் மூன்று சுற்று சுற்றுங்கள் நல்ல பலனை தரும்.

சில பேருக்கு பிரச்சினை பெரிய அளவில் இருக்கும் அவர்கள் திங்கள் கிழமை அன்று ஒவ்வொரு திங்கள் அன்றும் சிவவழிபாடு செய்யலாம். நல்ல பலனை இந்த பரிகாரம் தரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: