Followers

Tuesday, August 28, 2012

கும்பம் அமையும் வரன்



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் அமையும் வரன் எப்படி என்று பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பதிவில் கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு அமையும் வரனைப் பற்றி பார்க்கலாம். கும்ப ராசியின் அதிபதி சனி கும்ப ராசிக்கு ஏழாவது வீடாக வருவது சிம்ம ராசியாக வருகிறது. அதன் அதிபதி சூரியன்.

இவர்கள் வசிப்பது மலை ஸ்தலங்களில் தான் அதிகம் வசிப்பார்கள் அல்லது வீட்டுக்கு பக்கத்தில் குன்றுவாது இருக்கும்.இவர்களின் உடல் அமைப்பு ஆண் தன்மை உடையதாக இருக்கும். நடுத்தரமான உயரம். கம்பீரமான நடை இருக்கும்.

அதிகமான தன்னம்பிக்கை இருக்கும். அடுத்தவர்களிடம் எந்த உதவியும் எதிர்பார்க்க மாட்டார்கள். இவருக்கு வரும் பிரச்சினையை கூட உங்களிடம் சொல்ல மாட்டார்கள் அவர்களே வரும் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள விளைவார்கள். இவர் எந்த பிரச்சினையும் செய்ய மாட்டார். எந்த தவறும் செய்ய மாட்டார் அப்படியே செய்தாலும் இவர் மாட்டிக்கொள்வார்.

இவர் வேலை செய்வது அரசாங்கத்தில் தான் அதிகம் இருக்கும். அந்த வேலையில் நேர்மையாக இருப்பார். எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்.எந்த வேலையாக இருந்தாலும் பின் வாங்க மாட்டார். அந்த வேலையை முடித்தால் தான் இவருக்கு தூக்கம் வரும்.தனக்கு கீழ் வேலைபார்ப்பவர்களை விடாமல் வேலையை வாங்குவார். எந்த வேலையும் சட்டப்படி தான் நடக்க வேண்டும் என்று நினைப்பார்.

கோபம் அதிகமாக வரும் அதனால் இவருக்கு எதிரிகள் வர வாய்ப்பு இருக்கிறது.கோபத்தை மட்டும் வராமல் இருந்தால் இவர்கள் போல் நல்லவர் யாரும் இல்லை என்று சொல்லலாம் அந்தளவுக்கு இவர் நல்லவர்.

கும்ப ராசியை லக்கினமாக கொண்டவர்களே இப்படி வந்தால் இவர் தான் உங்களின் வாழ்க்கை துணையாக வருபவர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

நிழற்குடை said...

நான் கும்ப லக்கினம். சனி ஆறில் சந்திரனுடன். சிம்மத்தில் சூரியனும் சுக்கிரனும். செவ்வாயும் புதனும் கன்னியில். இது‍ போதாதென்று‍ ராகு, கேதுக்கள் முறையே ஒன்பது‍ மற்றும் மூன்றில். வயது‍ 37. ஆண். உருப்படியான ஒரு‍ வேலையும் இன்று‍ வரை அமையவில்லை. பல இடங்களில் என் போக்கிற்கு‍ ஒத்துவராத சூழல். விலகி வந்து‍ விடுவேன். ஆனால் எல்லோரும் நல்லவன் என்றுதான் கூறுகின்றனர். ஆனால் வேலைதான் சிக்கல். மனம் மரத்துப் போய்விட்டது. பத்தாதற்கு‍ ஏழாமிடத்து‍ அதிபதியின் திசை காலத்தில் மரணமும் வாய்க்கலாம் என்ற இனிய செய்தியை சொல்லி என்னை ஆசுவாசப்படுத்தி இருக்கிறீர்கள். கடக இராசி ஆயில்யம் என்பதால் அடுத்த இரு‍ ஆண்டுகளில் சூரிய தசை ஆரம்பம். குடும்பத்தை நினைத்தால்தான் கண் கலங்கி நெஞ்சம் பதறுகிறது. தேறுமா என் வாழ்‌க்கை?
பாபு,
பாளையம்.

rajeshsubbu said...

நிழற்குடை

வணக்கம் நண்பரே நான் சொல்லுவது பொதுபலன் நீங்கள் கவலைப்படதேவையில்லை உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிடலாம்.