Followers

Tuesday, August 14, 2012

சோதிட அனுபவம்

வணக்கம் நண்பர்களே மேலே இருக்கும் ஜாதகத்திற்க்கு பலன் கேட்டு இருந்தேன். ஒரு சிலர் தவிர வேறு யாரும் எனக்கு பலனை சொல்லவில்லை. பலனை அனுப்பியவர்கள் எனக்கு டைப் செய்ய முடியவில்லை என்று குறைவாக பலனை சொல்லி இருந்தார்கள். அனுப்பியவர்களின் பலனை நான் பதிவாக போடவில்லை. என்னுடைய பலனை தருகிறேன் படியுங்கள்

லக்கினாதிபதியான குரு கர்மஸ்தானமாகிய பத்தாம் வீட்டில் இருக்கிறார். லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் இருந்ததால் தன் முயற்சியால் முன்னேறியவர். பல வகையில் செல்வநிலையில் உயரவாய்ப்பு இருக்கிறது. குரு வக்கிரமாக இருக்கிறது. அதனால் ஏதும் பிரச்சினையாக இருக்குமா என்றால் இருக்கிறது பார்க்கலாம்.

இரண்டாம் வீடு குடும்பஸ்தானம் ஆகும். இரண்டாம் வீடாக மேஷராசி வருகிறது அதன் அதிபதி செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீசமாக அமர்ந்துள்ளது இரண்டாம் வீட்டிற்க்கு குருவின் ஐந்தாம் பார்வை கிடைக்கிறது. குரு ஐந்தாம் வீட்டில் இருந்து பார்ப்பதால் இவருக்கு நல்ல தனவரவு இருக்கிறது ஆனால் அதன் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் இருப்பது நல்லது தான் ஆனால் அவர் நீசமாக இருக்கிறார். செவ்வாயுடன் மூன்று கிரகம் இருக்கிறது. ஒரு கிரகமும் யுத்தம் ஏற்படவில்லை. 

இதற்கு என்ன பலன் என்று பார்த்தால் குடும்பம் அமையவில்லை. அமையவில்லை என்றால் இவருக்கு இது நாள்வரை திருமணம் நடைபெறவில்லை.இவருடைய பிறந்த தேதியை பார்த்தால் இவ்வளவு வயது ஆகியுமா என்று கேட்க தோன்றும். சத்தியமாக திருமணம் நடைபெறவில்லை. திருமணத்தை பற்றி பார்க்கும் போது அதனைப்பற்றி விரிவாக பார்க்கலாம். 

இரண்டாவது வீடு கண்ணை பற்றி குறிக்கும் இடம் அந்த இடத்தில் குருவின் வக்கிரபார்வை மற்றும் செவ்வாய் நீசத்தால் கண்ணில் ஒரு விபத்து ஏற்பட்டது ஆனால் பார்வை நன்றாக உள்ளது. உள்கண்ணில் விபத்துக்கான அடையாளம் இருக்கிறது. 

மூன்றாம் வீட்டில் இருக்கும் சனியின் பார்வை ஐந்தாம் வீட்டில் இருக்கும் கிரகத்தின் மீது விழுகிறது ஐந்தாம் வீட்டில் குடும்ப ஸதான அதிபதி செவ்வாய் இருக்கிறார் அதன் மீது விழும்போது சும்மா இருக்குமா என்ன இருவரும் அவ்வளவு சண்டை பிரியர் இவருக்கு குடும்பமே இல்லாமல் ஆக்கிவிட்டார். குடும்பம் இருக்கிறது ஆனால் இவர் குடும்பத்தோடு இல்லை.

மூன்றாவது வீடு  அதன் அதிபதி சுக்கிரன் நான்காவது வீட்டில் இருக்கிறார். மூன்றாவது வீட்டில் சனி மற்றும் மாந்தியும் அமர்ந்துள்ளது. இவருக்கு இளைய சகோதரிகள் இருவர் இருக்கிறார்கள். 

மூன்றாவது வீடு தைரியத்தை காட்டும் இடமாக இருப்பதால் அந்த வீட்டில் சனி இருப்பதால் இவர் நல்ல தைரியசாலியாக இருக்கிறார். சுக்கிரனின் வீடாக இருப்பதால் இசையில் மேல் நல்ல பிரியும் இவருக்கு அதுபோல காமத்தின் மீதும் ஈடுபாடு அதிகம் உண்டு.

மூன்றாவது அதிபதி நான்காவது  வீட்டில் இருப்பதால் பள்ளிபடிப்போடு நிறுத்திவிட்டார்.பத்தாம் வகுப்புக்குகூட தாண்டவில்லை.மூன்றாவது வீட்டில் சனி இருப்பது நல்லது தான் ஆனால் அங்கு இருப்பதால் பக்கத்துவீட்டுக்காரர்களுடன் சண்டை உருவாக்குவார். இவரும் அதுபோல் அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சண்டை போட்டுகொண்டு தான் இருக்கிறார்.

சனியின் பார்வை ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் ஒரு பிளஸ் பாயிண்டு உள்ளது அது என்ன என்றால் கேது மீது சனியின் பார்வை இருப்பதால் பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். உண்மையில் பொருளாதார வளர்ச்சி நல்ல முறையில் இருக்கிறது.

அடுத்த பதிவில் தொடர்ச்சியாக பார்க்கலாம்

அன்பு நண்பர்களே நான் பதிவில் தரும் ஜாதகங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் எனது உறவினர்களின் ஜாதகங்களை மட்டும் அவர்களின் அனுமதியோடு தான் பதிவில் அனுபவ சோதிடங்களாக தருகிறேன். அவர்களுடன் நான் இருப்பதால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை நான் நேரில் இருந்து பார்ப்பதால் உங்களிடம் அதனை தருகிறேன். வேறு யாருடைய ஜாதகங்களையும் நான் பதிவில் போடுவதில்லை. அதனால் தான் பிரபலமானவர்களின் ஜாதகங்களை நம் பதிவில் உங்களுக்கு நான் தருவதில்லை.

என்னை பொருத்தவரை என்னுடைய நேரடி அனுபவங்கள் இருந்தால் தான் நான் பதிவில் போடுவேன். நீங்களே என்னுடைய பதிவில் பிரபலமானவர்களின் ஜாதகங்களை தேடுங்கள் கண்டிப்பாக இருக்காது. நீங்கள் அனுப்பும் ஜாதகங்கள் கண்டிப்பாக அடுத்தவர்களிடம் கொடுக்கமாட்டேன்.

சோதிடம் என்பது உங்களின் அனைத்து வாழ்க்கையும் காட்டுகிற ஒரு கருவி உங்களை பற்றி அனைத்தும் தெரிந்துவிடும். ஒரு சோதிடன் கண்டிப்பாக அடுத்தவரிடன் ஒரு ஜாதகர் பற்றி சொல்லமாட்டான். ஏன் அவன் அனுமதி இன்றி அவர் குடும்பத்தார் கேட்டால் கூட சொல்லமாட்டான். அப்பொழுது தான் அவன் சோதிடன். என்னை நம்பி நீங்கள் ஜாதகங்களை அனுப்பலாம். இது எனது அன்பான வேண்டுகோள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

2 comments:

Rajaram said...

அண்ணே தாங்கள் குறிப்பிட்டுள்ள ஜாதகத்தில் லக்கினம் மீனமாக இருப்பதால் தெய்வீகமாக இருப்பார்கள்.ராசி கும்பமாக இருப்பதால் நிறைகுடம் போல் பல விஷயங்கள் அறிந்து வைத்திருப்பார்.ஆனால் பயன்படுத்தத் தெரியாது.சதய நட்சத்திரம் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள்,துரியோதனனுக்கும் நேரம் குறித்துச் சொன்ன சகாதேவன் போன்றோர்,புதையலைக் காக்கும் கரு நாகம் போல் பலரது ரகசியங்களும் தெரிந்திருக்கும்,இவர்களிடம் ஒரு விஷயத்தை அறிய வேண்டுமெனில் ஒரு அரைமணி நேரமாவது பேசித்தான் நம் வழிக்குக் கொண்டுவந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

பத்தில் குரு அதுவும் ஆட்சியாக மெத்தப்ப்டித்தப்(அனுபவனும் தான்) பண்டிதராக இருக்கவேண்டும்.மீன லக்கின பாவியான சுக்கிரன்(குரு சுக்கிர யோகம்) லக்கினாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல,இவரே வலியச் சென்று எதிரிகளை ஏற்படுத்திக்கொள்வார்.குடும்ப ஸ்தான,களத்திர,பாதகாதிபதிக்கு 6ம் அதிபதி சேர்க்கை கண்டிப்பாக களத்திர,குடும்ப‌ வழியில் நன்மை செய்யவாய்ப்பில்லை.மனைவி சண்டைக்குருவியாகத்தான் அமைவார்.உடன் கேது சேர்க்கை அப்படியே திருமணம்,குடும்பம் அமைந்திருந்தாலும் அவர்கள் தரும் தொல்லையே மனிதரை சாமியாராக்கிவிடும்.ரத்தக்கண்ணீர் வசனம் தான் கல்யாணமாம் கல்யாணம்,கல்யாணம் எதுக்குப்பண்ணுறது இங்க ஒரு பயலுக்கும் தெரியாதுனு புலம்ப வைக்கும்.மொத்தத்தில் பூர்வ புண்ணியம் அவுட்.இத்தனை கொலைகாரப் பயலுக 5க்கு வந்தால் என்ன வாழும்.

முக்கியமான கிரகங்கள் எல்லாம் பலம் குன்றி அமர்ந்திருப்பது ஒரு துரதிர்ஷ்டமே,லக்கினாதிபதியைத் தவிர்த்து(இவரு என்ன வாழுதாம் இவரும் கேந்திராதிபத்திய தோஷத்தில்,இருந்தாலும் சந்தோஷப்படலாம்).சுக்கிரன் கேந்திரமேறினாலும் பாவி என்ற முறையில் வலுப்பெற்றுத் தீமை தான் செய்வார்.

சிறப்பான அம்சம் என்றால் ராகு,கேதுவின் அமர்வு. மகர,கடக ராசிகளில் ராகு,கேது அமையப்பெற்றவர்கள் குருவே இல்லாமல் சாஸ்திர,சம்பிரதாயங்களைக் கற்றிருப்பார்கள்.பன்மொழிப்புலமை இருக்கும்.

rajeshsubbu said...

Rajaram said...
//* அண்ணே தாங்கள் குறிப்பிட்டுள்ள ஜாதகத்தில் லக்கினம் மீனமாக இருப்பதால் தெய்வீகமாக இருப்பார்கள்.ராசி கும்பமாக இருப்பதால் நிறைகுடம் போல் பல விஷயங்கள் அறிந்து வைத்திருப்பார்.ஆனால் பயன்படுத்தத் தெரியாது.சதய நட்சத்திரம் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள்,துரியோதனனுக்கும் நேரம் குறித்துச் சொன்ன சகாதேவன் போன்றோர்,புதையலைக் காக்கும் கரு நாகம் போல் பலரது ரகசியங்களும் தெரிந்திருக்கும்,இவர்களிடம் ஒரு விஷயத்தை அறிய வேண்டுமெனில் ஒரு அரைமணி நேரமாவது பேசித்தான் நம் வழிக்குக் கொண்டுவந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

பத்தில் குரு அதுவும் ஆட்சியாக மெத்தப்ப்டித்தப்(அனுபவனும் தான்) பண்டிதராக இருக்கவேண்டும்.மீன லக்கின பாவியான சுக்கிரன்(குரு சுக்கிர யோகம்) லக்கினாதிபதியைப் பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல,இவரே வலியச் சென்று எதிரிகளை ஏற்படுத்திக்கொள்வார்.குடும்ப ஸ்தான,களத்திர,பாதகாதிபதிக்கு 6ம் அதிபதி சேர்க்கை கண்டிப்பாக களத்திர,குடும்ப‌ வழியில் நன்மை செய்யவாய்ப்பில்லை.மனைவி சண்டைக்குருவியாகத்தான் அமைவார்.உடன் கேது சேர்க்கை அப்படியே திருமணம்,குடும்பம் அமைந்திருந்தாலும் அவர்கள் தரும் தொல்லையே மனிதரை சாமியாராக்கிவிடும்.ரத்தக்கண்ணீர் வசனம் தான் கல்யாணமாம் கல்யாணம்,கல்யாணம் எதுக்குப்பண்ணுறது இங்க ஒரு பயலுக்கும் தெரியாதுனு புலம்ப வைக்கும்.மொத்தத்தில் பூர்வ புண்ணியம் அவுட்.இத்தனை கொலைகாரப் பயலுக 5க்கு வந்தால் என்ன வாழும்.

முக்கியமான கிரகங்கள் எல்லாம் பலம் குன்றி அமர்ந்திருப்பது ஒரு துரதிர்ஷ்டமே,லக்கினாதிபதியைத் தவிர்த்து(இவரு என்ன வாழுதாம் இவரும் கேந்திராதிபத்திய தோஷத்தில்,இருந்தாலும் சந்தோஷப்படலாம்).சுக்கிரன் கேந்திரமேறினாலும் பாவி என்ற முறையில் வலுப்பெற்றுத் தீமை தான் செய்வார்.

சிறப்பான அம்சம் என்றால் ராகு,கேதுவின் அமர்வு. மகர,கடக ராசிகளில் ராகு,கேது அமையப்பெற்றவர்கள் குருவே இல்லாமல் சாஸ்திர,சம்பிரதாயங்களைக் கற்றிருப்பார்கள்.பன்மொழிப்புலமை இருக்கும்.
*//

வணக்கம் நண்பரே நல்ல தகவல் தந்துள்ளீர்கள்.நன்றி