வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசாவில் இப்பதிவில் சிம்ம லக்கினத்திற்க்கு எப்படி பட்ட வரன் அமையும் என்று பார்க்கலாம். சிம்ம ராசிக்கு ஏழாவது வீடாக வருவது கும்பராசி. சிம்ம ராசியின் அதிபதி சூரியன் கும்பராசியின் அதிபதி சனி. இரண்டு பேரும் தந்தையும் மகனுமாக இருந்தாலும். பரம எதிரிகள். என்ன செய்வது கடவுளின் செயல் என்றால் அதை பட்டுதான் ஆகவேண்டும். சிம்ம ராசியை லக்கினமாக உங்களுக்கு அமையும் வரன் எப்படி என்று பார்த்து விடலாம்.
அதிக உயரம் இருக்க மாட்டார். அழகும் கம்மிதான் ஆடம்பரத்தை விரும்பமாட்டார்கள் .முகத்தில் எண்ணெய் வழியும். இவர்களின் நடையை பார்த்தால் ஊனமுற்றவர்கள் போல் தோன்றும். இவர் இருக்கும் ஏரியாவில் ஊனமுற்றோர் இல்லம் இருக்கும்.
எதையும் லாப நோக்கத்தோடு தான் பார்ப்பார்கள். எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணம் இவரிடம் காணப்படும். நண்பர்களிடம் சம்பாதிக்க நினைப்பார்கள். இவர்கள் பேசுவது பெரும்பாலும் எப்படியாவது பணத்தை சேர்த்துவிடவேண்டும் அடிக்கடி சொல்லுவார்கள்.
தவறு செய்வதற்க்கு அஞ்ச மாட்டார்கள் ஆனால் நீங்கள் தவறு செய்தால் அடுத்தவர்களிடம் மாட்டிக்கொள்வீர்கள். எப்படி ஜோடி பொருத்தம் பார்த்தீர்களா.
எந்த பிரச்சினையிலும் தெளிவான முடிவு எடுப்பவர்களா இருப்பார். பொதுமக்களிடம் எளிதில் பழககூடியவர்கள். வசியமான பேச்சு திறமை உடையவர்.சகோதர பாசம் அதிகமாக இவர்களிடம் இருக்கும். லாபம் லாபம் என்று சேர்த்த பணத்தை சகோதரர்களிடம் கொடுத்துவிடுவார்கள்.
என்ன சிம்ம ராசியை லக்கினமாக கொண்டவர்களே உங்களுக்கு வாழ்க்கையை துணை இப்படி தான் இருப்பார் அப்படி யார் வந்தாலும் அவரை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment