வணக்கம் நண்பர்களே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுபவர்கள் அனைவரும் என்னிடம் சொல்லுவது என்ன என்றால் நான் ஆன்மிகத்தில் ஈடுபடவேண்டும். சித்தராக வேண்டும். நான் அவ்வாறு போவதற்க்கு வழியை சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர்களின் ஜாதகத்தை கொடுத்து எனக்கு குரு எப்படி அமைவார்கள் என்று கேட்டாலும் சொல்லலாம்.
பல நண்பர்கள் என்னிடம் பல தளங்களின் முகவரியை கொடுத்து அந்த தளத்தில் இப்படி சொல்லுகிறார்கள் அவர்கள் சித்தரை தரிசிக்க ஏற்பட செய்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த முகவரிக்கு சென்றால் அவர்கள் சொல்லும் பதிவுகளை பார்த்தால் நல்ல வேடிக்கையாக இருக்கிறது.
ஒரு மாந்தீரிகவாதி சொல்லுவதை தான் அவர்கள் சொல்லுகிறார்கள். அந்த மையை எடுப்பது எப்படி பேய் விரட்டுவது எப்படி என்று தான் சொல்லுகிறார்கள். ஒளி உடல் அப்படி இப்படி என்று பயமுறுத்திக்கிறார்கள். பல பேர் இந்த போட்டாவில் பாருங்கள் ஒளி தெரிகிறது. அது மனித உருவத்தில் வருகிறது பாருங்கள் என்று வேற சொல்லுகிறார்கள்.
நீங்கள் போய் ஏமாந்துவிடாதீர்கள். பலமுறை சோதனைக்கு பிறகு ஏற்றக்கொள்ளுங்கள். பல பேர் கேரளாவில் போய் கொஞ்ச காலம் மாந்தீரிகம் கற்றுக்கொள்வது அதனை வைத்து இங்கு ஏதாவது சொல்லி மக்களை குழப்புவது இது தான் வேலையாக இருக்கிறார்கள்.
நான் கூட சொல்லி இருந்தேன் சாமியார்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று ஆனால் அடுத்த பதிவிலேயே எச்சரிக்கையும் கொடுத்துவிட்டேன். நீங்கள் சோதிடராக இருக்கும் பட்சத்தில் இப்படி தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் தரும் சில கருத்துக்கள் உங்களின் சோதிட அறிவுக்கு மிக உகந்ததாக இருக்கும் அதனை வைத்து ஒரு சில பிரச்சினைகளை தீர்க்கமுடியும். என்று சொல்லி இருந்தேன். மறுபடியும் சொல்லுகிறேன் அவர்களிடம் போய் ஏமாந்துவிடாதீர்கள். பல தடவை சோதனை செய்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆண்கள் மட்டும் தொடர்பு வைத்துக்கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் ஏதாவது பெண் துறவியாக பார்த்து தொடர்பு வைத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
இந்த மாதிரி தளங்களை படிப்பவர்கள் இளைஞர்கள் அதிகம்பேர். அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளி இடங்களில் தங்கி அவர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் நகரத்தில் இருக்கிறது. அந்த மனஅழுத்தத்தை வைத்து இவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள்.
கடந்த காலத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி ஏமாற்றினார்கள். இன்று சித்தரை காட்டுகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்.
ஒரு வியாபாரியின் நோக்கம் பணம். ஒரு சாமியாரின் நோக்கம் அவனுக்கு பல சீடர்கள். நீங்கள் போய் விழுந்துவிடாதீர்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது உங்களின் பெற்றோரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு எடுங்கள். அது தான் நன்மை பயக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment