Followers

Tuesday, August 21, 2012

திருமணம் உறவிலா அல்லது அந்நியத்திலா



வணக்கம் நண்பர்களே ஏழாம் அதிபதியின் தசாவை பற்றி பார்த்துவருகிறோம் அதில் சில அடிப்படை தகவல்களை சேர்ந்து பார்த்தால் நன்றாக இருக்கும். ஒருவருக்கு திருமணம் நடைபெறுவது உறவிலா அல்லது அன்னியத்திலா என்று இப்பதிவில் பார்க்க போகிறோம். முழு ஜாதகத்தையும் பார்த்தால் தான் அது தெரியவரும் ஏழாம் அதிபதியின் நிலை வைத்து சொல்லலாம். அதிக பட்சம் ஏழாம் அதிபதி தசாவில் தான் அவ்வாறு நடைபெறும் இல்லை என்றால் ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டு தசா நடந்தால் நடைபெறும். 

ஏழாம் அதிபதி லக்கனத்தில் இருந்தால் தூரத்து உறவாக இருக்கும். அவரவர்களே துணையை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். 

ஏழாம் அதிபதி இரண்டாம் வீட்டில் இருப்பது அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி மூன்றாம் வீட்டில் இருப்பது உடன்பிறப்பின் உறவில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி நான்காம் வீட்டில் இருப்பது தாய்வழியில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஐந்தாம் வீட்டில் இருப்பது காதல் திருமணம் நடைபெறும். 

ஏழாம் அதிபதி ஆறாம் வீட்டில் இருப்பது தாய்வழி மாமன் உறவில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஏழாம் வீட்டில் இருப்பது தூரத்து உறவாக இருக்கும்.

ஏழாம் அதிபதி எட்டாம் வீட்டில் இருப்பது அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால் அந்நிய நாட்டில் வேலை செய்பவராக இருக்கலாம்.

ஏழாம் அதிபதி பத்தாவது வீட்டில் இருந்தால் அவரது தொழிலில் உள்ளவராக இருக்கலாம்.

ஏழாம் அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால் நண்பர்கள் குடும்பத்தில் திருமணம் நடைபெறும்.

ஏழாம் அதிபதி பனிரெண்டாம் வீட்டில் இருந்தால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.

உங்களுக்கு அமையும் துணைவர் யார் என்று நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

1 comment:

உதய குமார் said...

ஒருவர் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி யார் என்பதை எப்படி கண்டறியலாம என்று கூறினால் உதவியாக இருக்கும்...