வணக்கம் நண்பர்களே!
திண்டுக்கல்லில் இருந்து திரு சுப்பிரமணியன் ஐயா அவர்கள் எனக்கு புத்தகம் ஒன்றை அன்பு பரிசாக அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய புத்தகத்தின் பெயர் யோகி ராம்சுரத்குமார் சிறப்பு மலர்.
திருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம்சுரத்குமார் பற்றி படிக்க படிக்க நமது ஆத்மா புத்துணர்வு பெறுகிறது. அந்த புத்தகத்தை முழுவதும் நான் படித்தபிறகு தான் உங்களுக்கு இந்த பதிவை எழுதுகிறேன். திண்டுக்கல் சுப்பிரமணியன் ஐயா அவர்கள் சுவாமியின் தீவிர பக்தர். அந்த யோகியோடு அவர் பழகியிருக்கிறார். அந்த யோகியைப்பற்றி நானும் அறிய வேண்டும் என்று அன்போடு அந்த புத்தகத்தை அனுப்பி இருந்தார்.
அந்த புத்தகத்தில் இருந்து ஒரு சில வரிகளை உங்களின் கண்களுக்கு தருகிறேன் படித்து பாருங்கள்.
பகவானிடம் நெருங்க நெருங்க நாம் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைக்கிறது. நம்மை இவ்வுலக பந்தபாசம் பொருளாதாரம் மருத்துவம் இவற்றிலிருந்து பிரிக்கிறார். மனிதரில் விலங்கான நமது ஆசையை நீக்கி மனிதரில் மனிதனான அன்பால் கருணையால் மனிதரில் தெய்வமான அருளால் பகவான் நம்மை வழி நடத்துகிறார்.
மகனே நீ உடல் அல்லவே அல்ல உடலுக்கு நீ உரியவன் அல்ல உனக்கும் உடல் உரியதல்ல உடல் என்பது ஒரு சட்டையைப் போன்றதை தவிர வேறு ஒரு சிறப்புமே அதற்கு இல்லையப்பா உடலுக்கு உரிய குணங்களும் தொழில்களும் உன்னை ஒருபோதுமே மாற்றமாட்டா மகனே உடல் வளரலாம் தேயலாம் ஆனால் அவை உனக்கு இல்லை செல்லமே.
பல நல்ல பொக்கிஷங்கள் அந்த புத்தகத்தில் இருக்கின்றன. அனைத்தையும் நான் எழுதகூடாது என்பதால் ஒரு சில கருத்துக்களை மட்டும் உங்களுக்கு தந்தேன். புத்தகத்தை எனக்கு அனுப்பிய திரு சுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Nice lines sir. Thanks for sharing...
KJ said...
Nice lines sir. Thanks for sharing.
நன்றி நண்பரே
Post a Comment