வணக்கம் நண்பர்களே!
இன்று காலை திருப்போரூர் கந்தசுவாமியை தரிசிக்க சென்று விட்டேன். அதனால் தான் பதிவை தாமதமாக வெளியிடுகிறேன்.
கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு பெரிய கட்டிடத்தை கட்டுவதற்க்கு என்னிடம் பல மாதங்களுக்கு முன்பு ஆலோசனை கேட்டுருந்தார் ஒருவர். அவரின் வீட்டிற்க்கு நாம் தான் ஆன்மீகவழிகாட்டி என்பதால் அவரின் அனைத்து செயலுக்கும் முன்னிலை வகித்து அனைத்தையும் செய்துக்கொடுப்பேன். கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய அளவில் வணிக வளாகம் கட்டுவதற்க்கு முடிவு செய்திருந்தார்.
அவர் என்னிடம் தொடர்புக்கொண்டு அனைத்து விபரங்களையும் கேட்டுருந்தார். அந்த கட்டிடம் ஆரம்பம் செய்வதற்க்கு முன்பு திருப்போரூர் சென்று அபிஷேகம் செய்ய சொல்லிருந்தேன். அவரின் குடும்பத்தோடு நானும் திருப்போரூர் முருகன் கோவில் சென்று அபிஷேகம் செய்தோம். பிறகு கட்டிட வேலை ஆரம்பிக்கப்பட்டது. நல்லமுறையில் முருகனின் அருளோடு கட்டிட வேலை முடிந்தது அனைத்திலும் இப்பொழுது கம்பெனிகள் வந்துவிட்டன.
நினைத்த காரியம் எந்தவித தடங்களும் இல்லாமல் முடிவடைந்துவிட்டதால் திருப்போரூர் முருகன் கோவில் சென்று இன்று அவரை வணங்கி வந்தோம். நீங்களும் உஙகளின் நிலத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் உங்களின் அருகாமையில் இருக்கும் முருகன் கோவில் சென்று அபிஷேகம் செய்துவிட்டு வீட்டை கட்டஆரம்பியுங்கள்.உங்களின் வீடு எந்தவித தடங்களும் இல்லாமல் முழுமை பெற்றுவிடும்
நிலம் சம்பந்தப்பட்ட எந்தவித வேலையாக இருந்தாலும் முருகனை வழிப்பட்டுவிட்டு செய்தால் உங்களுக்கு அந்த விசயத்தில் வெற்றி பெறமுடியும்.
என்ன செய்வீர்களா?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
நல்ல தகவல் !
செவ்வாய் பூமி காரகன் என்பதாலும்
செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான் என்பதாலுமா ?
இருப்பினும் கட்டிடகாரகன் சுக்கிரன் தானே ?
இது பொதுவில் அனைவர்க்கும் பொருந்துமா ?
நான் தங்களின் வலைப்பதிவினைத் தொடர்பவள் .
அனைத்து தகவல்களும் அம்சங்களும் மிக நன்றாக உள்ளன.
மிக்க நன்றி !
வணக்கம் ஸ்ரவாணி பூமிக்காரனை பிடித்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வீட்டையும் கட்டி தருவான். இது பொதுபரிகாரம் தான் அனைவரும் செய்யலாம். சுக்கிரன் அழகான வீட்டிற்க்கு அதிபதி தான் ஆனால் செவ்வாயை நாம் வணங்கி பெற்றுவிடலாம். நமது பதிவை பின்தொடர்வதற்க்கு நன்றி. உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் நமது பதிவைப்பற்றி சொல்லுங்கள். நன்றி
Dear Rajesh Subbu
Good Night.
Sevvai Nandraga Irundhal
"Nilam vangalam(Investment Purpose)"
Sukkiran Nalla Irundhal
"Azhagaga" veedu kattalam.
Saturn Nangu Irundhal "Old House" Vangalam.
Thanks
Arul Kumar Rajaraman
வணக்கம் Arulkumar Rajaraman தகவலுக்கு நன்றி நண்பரே
Post a Comment