Followers

Saturday, May 4, 2013

தசாநாதனும் எண்ணங்களும்



வணக்கம் நண்பர்களே!
                    ஒரு ஜாதகனை வழிநடததுவதில் தசாநாதனின் பங்கு முக்கியம் வாய்ந்தது. அவனுக்கு நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்க்கும் அவர் காரகம் வகிப்பார். ஒரு சில மனிதர்களை பார்த்தால் ஒரு சில காலகட்டங்களில் நாத்திகவாதியாக இருப்பார்கள். பல வருடங்களுக்கு பிறகு ஆன்மீகவாதிகளாக மாறிவிடுவார்கள். இது அனைத்திற்க்கும் காரணம் அவர்களின் எண்ணங்களை உருவாக்குவதில் தசாநாதனின் பங்கு முக்கியமான ஒன்று.

இன்று பார்த்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாக உருவாகி வருகிறது. இரண்டு பேருக்கும் புரிதல் இருக்கவில்லை இதற்க்கும் தசாநாதன் தான் காரணமாக இருக்கிறது. கணவன் அல்லது மனைவியின் தசாநாதனை வைத்துக்கொண்டு அவர்களின் எண்ணங்களின் தேவை இப்படி தான் இருக்கிறது என்பதை நீங்கள் பார்த்துவிட்டு அவர்களின் எண்ணங்களுக்கு படி நீங்கள் நடக்கும்பொழுது உங்களுக்கும் உங்களின் துணைவருக்கும் பிரச்சினை வராது.

எப்படி பிரச்சினை உருவாகும் என்பதை நாம் கணித்துவிடவேண்டும். இது தான் பிரச்சினை என்றால் தீர்ப்பது எளிது. ஒவ்வொரு மனிதனும் பிரச்சினை வரும்பொழுது நான்கு நிலையை கடக்க வேண்டும். 

1 பிரச்சினையை ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு வித ஜடநிலை.
2 பிரச்சினையை மறுப்பதால் பிரச்சினை நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கும் மனநிலை.
3 பிரச்சினையை நீங்காதனை கண்டு சோகமடையும் நிலை.
4 நடந்ததை கண்டு அதற்கு தீர்வு காணும் நிலை.

ஒரு மனிதன் மூன்று நிலையும் கடந்து நான்காவது நிலைக்கு வரும்பொழுது மட்டுமே அவன் புத்திச்சாலி.நடந்தது நடந்துவிட்டது அதற்க்காக வருத்தபட்டுக்கொண்டு உட்கார்ந்து இருப்பது வீண். நடந்த விசயத்திலிருந்து மீண்டு வருவது புத்திசாலித்தனம். 

நாம் தான் சோதிடர்களாவிட்டோமே. பிரச்சினை வருவதற்க்கு முன்பே கணி்த்துவிடும் ஆற்றல் பெற்றுருக்கிறோம் அல்லவா.

இப்பொழுது பிரச்சினைகளை வகைப்படுத்தலாம்

அறம் சார்ந்த பிரச்சினை
பொருள் சார்ந்த பிரச்சினை
மகிழ்ச்சி சார்ந்த பிரச்சினை
மோட்சம் சார்ந்த பிரச்சினை

1 அறம் சார்ந்த பிரச்சினை என்பது கல்வி மனம் புத்திச்சாலிதனம் பூர்வபுண்ணியம் போன்றவை

2 பொருள் சார்ந்த பிரச்சினை என்பது பணம் தொழில் சார்ந்த பிரச்சினை

3 மகிழ்ச்சி சார்ந்த பிரச்சினை என்பது காதல் காமம் ஆடம்பரம் சார்ந்த பிரச்சினை

4 மோட்சம் சார்ந்த பிரச்சினை என்பது இறப்பு மேல்உலகம் சார்ந்த பிரச்சினை .இந்த காலத்தில் யார் மோட்சத்திற்க்கு சண்டை போட்டுக்கொள்கிறார்கள். வறுமை கவலை உடல்நிலை போன்றவற்றை வைத்துக்கொள்ளலாம்.

அறம் சார்ந்த ஸ்தானங்களின் வீடுகள் 1, 5, 9
பொருள் சார்ந்த ஸ்தானங்களின் வீடுகள் 2, 6,10
மகிழ்ச்சி சார்ந்த ஸ்தானங்களின் வீடுகள் 3, 7, 11
மோட்சம் சார்ந்த ஸ்தானங்களின் வீடுகள் 4, 8, 12

ஒருவருக்கு அறம் சார்ந்த வீடுகளின் தசா நடைபெறும் பொழுது அவர்களின் எண்ணம் அறம் சார்ந்தவையாகவே இருக்கும். ஒரு பெண்ணிற்க்கு இந்த தசா நடைபெற்றால் அவனின் கணவன் அவளிடம் போய் காமத்தைப்பற்றி பேசினால் யாருடா இவன் என்னை இப்படி தொந்தரவு செய்கிறான் என்று நினைப்பாள்.  நான் யார்? எனது பூர்வபுண்ணியம் என்ன? நான் இந்த பூமியில் வந்ததி்ன் நோக்கம் என்ன என்று தேடிக்கொண்டு இருக்கிறேன். இவன் என்னடா என்றால் என்னை கஷ்டபடுத்துகிறான் என்று நினைப்பாள்.

ஒவ்வொருவருக்கும் என்ன தசா நடைபெறுகிறது என்று பார்த்துவைத்துக்கொண்டு அவர்களின் எண்ணத்தை தெரிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால் பிரச்சினை வராது.

1, 5, 9 ஆம் வீடுகளின் தசா நடைபெற்றால் அவர்களின் தேவை ஆன்மீக தேடுதலாக இருக்கும். அவர்களை அழைத்துக்கொண்டு கோவில், யாத்திரை, தீர்த்தங்களில் நீராடுவது, சித்தர்களின் சமாதி, மூலிகை எடுப்பது மற்றும் ஜாதக கதம்பம் படிக்கசொல்லுவது போன்றவை அவர்களின் மனதிற்க்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும்.

தசாநாதனின் செயல்பாட்டை பொருத்து தான் அவர்களின் வாழ்க்கை செல்லும். அதைப்போல் தசாநாதனின் குணத்தையும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

KING of SWING said...

nicely conceptulised and written. What if the dasha lord is lord of 2 houses take 4 and 5. Only one of the house tatvas apply or both please explain

ATOMYOGI said...

ராகு திசை நடப்பவர்களுக்கு எந்த வீட்டின் திசை நடப்பதாக எடுத்து கொள்வது?