வணக்கம் நண்பர்களே!
தசாவைப்பற்றி எழுதியவுடன் நண்பர்கள் கேள்வி கேட்டுள்ளார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒரு வீட்டில் அமரும் கிரகம் இரண்டு அல்லது மூன்று வீடுகளில் சம்பந்தப்படும். ஒரு வீட்டை மட்டும் வைத்து எண்ணங்களை எப்படி கண்டுபிடிப்பது கேள்வி எழுவது உண்மையான ஒன்று. எப்படி கிரகங்கள் அமரும்பொழுது பலனை சொல்லுகிறோமோ அதே போலவே தசாநாதனுக்கும் கண்டுபிடிப்பது கடினமான ஒன்று தான். ஜாதகத்தில் உள்ள பனிரெண்டு வீடுகளையும் அப்படியே மிக்ஸ் பண்ணி தான் பலனை நாம் சொல்லவேண்டும். தசாநாதன் மட்டும் கிடையாது அதன் பிறகு வரும் அந்தரங்களையும் வைத்து தான் பலன் சொல்லவேண்டும்.
ஏழாம் வீட்டை எட்டாம் வீட்டையும் சொந்தவீடாக கொண்ட ஒரு கிரகம் ஐந்தாவது வீட்டில் போய் அமர்ந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாம் வீட்டிற்க்கு ஐம்பது சதவீத பலனையும் ஏழாவது வீட்டிற்க்கு 25 சதவீதத்தையும் எட்டாவது வீட்டிற்க்கு 25 சதவீதத்தையும் வைத்து பலன் சொல்லலாம். அனுபவத்தில் பார்க்கும்பொழுது சொன்ன பலனை சரியாக தருகிறது. ஒரு வீட்டிலிருந்து சென்று அமரும் வீட்டின் பலனை அதிகமாக தருவதை அனுபவத்தில் பார்க்கமுடிகிறது.
தசாநாதனின் நிலையையும் நாம் கவனிக்கவேண்டியதாகிறது. அந்த கிரகம் அமரும் நட்சத்திரம் அந்த நட்சத்திரத்தின் அதிபதி இந்த கிரகத்திற்க்கு நட்பா பகையா அல்லது நீசமா என்றும் பார்க்கவேண்டியிருக்கிறது. அந்த வீட்டில் அமரும்பொழுது அந்த வீட்டை இந்த அதிபதிக்கு தங்குவதற்க்கு இடம் கொடுத்தவர் நட்பா பகையா என்றும் பார்க்கவேண்டும்.
லக்கினத்திற்க்கு திரிகோணத்தில் இருக்கிறதா அல்லது உச்சவீட்டில் இருக்கிறதா கேந்திரத்தில் இருக்கிறதா சூரியனில் அஸ்தங்கம் அடைந்திருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும்.
தசாவை நட்சத்திரம் வைத்து கணிப்பதால் நட்சத்திரத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. அனுபவத்த்தில் ஜென்மலக்கின நட்சத்திரத்தில் இருந்து 6 ,8, 12 நட்சத்திரஅதிபதியின் தசாவில் ஜாதகருக்கு கடினமான கஷ்டத்தை தருவதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
இந்த தகவல் மட்டும் உங்களுக்கு போதாத ஒன்று. ஆரம்பத்திலிருந்து தசாவைப்பற்றி எழுதுகிறேன் அப்பொழுது எளிதில் உங்களுக்கு புரியும்.
இப்பொழுது உங்களுக்கு இது போதும்.
Mayavi said...
ராகு திசை நடப்பவர்களுக்கு எந்த வீட்டின் திசை நடப்பதாக எடுத்து கொள்வது?
ராகு கேது அமரும் நட்சத்திரத்தின் பலனை அதிகமாக தருகிறது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
4 comments:
Thanks for the response
Sir, nice lesson.if dasa owner have aspect of lagnathypathy, will it have additional effects?
//* KJ said...
Sir, nice lesson.if dasa owner have aspect of lagnathypathy, will it have additional effects?*//
வணக்கம் நண்பரே அனைத்தையும் தசாபதிவில் பார்க்கலாம்.
//* KING_OF_SWING said...
Thanks for the response *//
வணக்கம் நண்பரே.தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment