வணக்கம்!
எங்கள் பகுதியில் எல்லாம் கிராம பகுதியில் கிணறு இருக்கும். தற்பொழுது அந்த கிணற்றில் எல்லாம் தண்ணீர் கிடையாது. போர் செட் வந்த பிறகு கிணறுகளில் தண்ணீர் இருப்பதில்லை. பல கிராமங்களில் பழைமையான கிணறு எல்லாம் தற்பொழுதும் இருக்கின்றது.
பழைய கிணற்றை நீங்கள் உற்று பார்த்தால் அந்த கிணறு உங்களை உள்ளே கூப்பிடுவது போல் உங்களின் மனதிற்க்கு தெரியும். அதனாலே நீங்கள் கிணற்றில் தவறி விழுந்துவிடுவீர்கள். பல பேர்கள் கிணற்றில் விழுவது இந்த காரணத்தால் தான் இருக்கும்.
நீங்களே இதனை ஆராய்ச்சி படி செய்து பாருங்கள். அந்த கிணற்றை உற்று நோக்கினால் அது உங்களை கூப்பிடுவது போல் இருக்கும். பழைய கிணற்றின் தன்மை அது. இந்த உலகத்தில் எல்லாம் ஒரு உயிர்தன்மை போல் செயல்படும்.
நான் சிறுவனாக இருந்தப்பொழுது எங்களின் ஊரில் அனைவரின் வீட்டிலும் கிணறு இருந்தது. விடியற்காலையில் பெண்கள் அந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து முறைவாசலில் தெளிப்பார்கள். விடியற்காலை நான்கு மணிக்கு எழும்பொழுது தண்ணீரை எடுப்பதற்க்கு முன் வாளியை வேகமாக எடுத்து சத்தம் வருவது போல் செய்வார்கள். அது எதற்கு என்றால் கிணற்றில் இருக்கும் தண்ணீர் தூங்கிக்கொண்டிருக்குமாம் அந்த தண்ணீரை விழிக்க செய்க இப்படி சத்தம் கொடுத்து வாளியை உள்ளே விடுவார்கள்.
அனைத்திற்க்கும் ஒரு மதிப்பு கொடுத்து உயிர் தன்மையோடு வாழ்ந்த காலங்கள் இனி வராது. இதனை ஏன் உங்களி்டம் சொல்லுகிறேன் என்றால் உலகத்தை உற்று நோக்கினால் நிறைய விசயங்கள் உங்களுக்கு தெரியவரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Enga veettula palaya kinaru irukku,neenga solvadhai naanum unarthirukken.
Post a Comment