Followers

Saturday, June 20, 2015

அனுபவம்


ணக்கம்!
          ஒவ்வொரு ஊர்களிலும் என்னை சந்திக்கும்பொழுது கேட்கபடும் முதல் கேள்வியாக இருப்பது. எனக்கு கடன் இருக்கிறது அதனை தீர்ப்பதற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள். 

ஒவ்வொருவருக்கும் கடன் ஏற்படுவது இயற்கை. பணக்காரர்கள் என்று சொல்லப்படும் நபர்களுக்கும் கடன் இருக்கிறது. ஜாதகத்தில் ஆறாவது வீடு என்று ஒன்று இருக்கும் வரை மனிதனுக்கு கடன் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கும். கொஞ்ச காலம் விட்டுவைக்கும் அதன் பிறகு மறுபடி கடன் ஏற்படும். இது இயற்கை என்று எடுத்துக்கொள்வது நல்லது.

ஒவ்வொருவருக்கும் நல்ல குடும்பம் அமைந்துவிட்டால் அதுவே மிகப்பெரிய புண்ணியம் நாம் செய்து இருக்கிறோம் என்று மகிழ்ச்சியோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். குடும்பம் அமையவில்லை என்றால் தான் பிரச்சினையை தவிர கடன் இருப்பது பிரச்சினை இல்லை.

சம்பாதிக்கவே இல்லை என்று மனம் தளரவேண்டாம். இன்னும் பத்து வருடங்கள் சம்பாதிக்காமல் இருந்தால் கூட அதன் பிறகு சம்பாதித்துக்கொள்ளலாம். நல்ல குடும்பம் இருந்தால் போதும். கடனைப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம். கடனை அடைக்க கடவுள் ஒரு வழி செய்துக்கொடுப்பார்.

நல்ல குடும்பங்களை சந்திக்கும்பொழுது நான் அம்மனிடம் இவர்களின் குடும்பத்தில் என்றும் சந்தோஷத்தை அளிக்கவேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டு வருவேன். நல்ல குடும்பம் அமைந்துவிட்டால் போதும்.

சென்னையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Kudumbam oru kovil.nalla kudumbam amaiya irai arul vendum.