Followers

Saturday, June 13, 2015

ஆன்மீகப்பயிற்சி எதற்கு?


வணக்கம்!
                        வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைக்கு நமது கர்மாவை நாம் கை காட்டினாலும் அதில் இருந்து விடுபடுவதற்க்கு நாம் முயற்சி செய்வதில்லை அல்லது அதற்க்கான சரியான வழியை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. விதி நம்மை துரத்துகிறது என்று சொல்லிக்கொண்டு இருப்பதும் சரியான பதில் இல்லை.

ஒவ்வொரு ஜென்மத்திலும் கர்மா துரத்திக்கொண்டும் நாம் சேர்த்துக்கொண்டும் தான் இருப்போம். ஒவ்வொரு நாளும் கர்மா சேர்ந்துக்கொண்டு தான் இருக்கும். அந்த கர்மாவைப்பற்றி கவலைக்கொள்ளாமல் சரியான ஆன்மீகபாதையை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் அதில் இருந்து நீங்கள் மீழ்வது எளிது.

நாம் செய்யும் ஆன்மீக முயற்சி எளிதில் நம்மை கர்மாவில் இருந்து மீட்டு நல்வாழ்வையும் அதே நேரத்தில் அனைத்து ஜென்மத்தில் இருந்தும் விடுதலை செய்ய வைக்கும்.

தற்பொழுது நமது இளைஞர்களுக்கு பெரிய பிரச்சினை குழந்தை பாக்கியம் இல்லாமல் போவது. பத்து திருமணம் நடைபெற்றால் ஐந்து திருமண தம்பதிகள் மருத்துவமனைக்கு அலைந்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். இப்படி ஏகாப்பட்ட விசயத்தை சொல்லலாம். ஏன் பல பேர்க்கு திருமணம் கூட நடைபெறமாட்டேன்கிறது.

இளைஞர்களாக இருக்கும்பொழுதே நீங்கள் சரியான ஒரு ஆன்மீகப்பயிற்சியை மேற்க்கொண்டு வந்தீர்கள் என்றால் இப்படிப்பட்ட பிரச்சினையை எல்லாம் எளிதில் சமாளித்து வந்துவிடலாம்.

ஒருவரது மனது பண்பட்டாலே அவனுக்குள் தெய்வீகதன்மை வந்துவிடும் என்று பல மகான்கள் சொல்லியுள்ளனர். மனதை சரியான வழியில் கொண்டு செல்வதற்க்கு ஆன்மீகம் உங்களுக்கு மிகப்பெரிய உதவியை செய்யும். மனதை சரிப்படுத்தினாலே உங்களின் ஆத்மா புனிதம் அடைந்துவிடும். ஏதாவது ஒரு ஆன்மீக வழியை நீங்கள் உடனே துவங்குங்கள்.

வயதான காலத்தில் ஆன்மீகப்பயிற்சி செய்தால் உங்களின் உடல் ஒத்துழைப்பதில்லை. இளைஞர்களாக இருக்கும்பொழுது உங்களின் ஆன்மீக பயணத்தை தொடங்குங்கள்.

நாளை அம்மன் பூஜை நடைபெறுகிறது.

விரைவில் கோயம்புத்தூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நண்பர்கள் உடனே தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு