வணக்கம்!
ஒருவருக்கு சந்திரன் ஆறாவது வீடாக அல்லது சந்திரன் ஆறாவது வீட்டில் அமர்ந்து இருந்தால் அவரின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்பு அதிகம் ஏற்படும்.
ஆறாவது வீடு நோயை காட்டும் வீடாக இருப்பதால் அதில் சந்திரன் அமரும்பொழுது நீர் சம்பந்தப்பட்ட நோய் அதிகம் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.
என்னுடைய அனுபவத்தில் ஆறாவது வீட்டில் சந்திரன் இருப்பவர்களுக்கு அதிகம் மூச்சு விடுவதில் பிரச்சினை இருக்கிறது. நுரையீரல் பிரச்சினையால் இது ஏற்படுகிறது. இதற்கு மருத்துவர்களிடம் செல்லும்பொழுது அதற்கு தீர்வு என்பது அவ்வளவு எளிதில் கொடுத்துவிடமுடியாது. இப்படிப்பட்டவர்கள் பல மருத்துவர்களிடம் சென்று தீர்வு ஏற்படவில்லை என்று நொந்து போனவர்களும் இருக்கின்றார்கள்.
மனநிலையில் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சந்திரனுக்கு உரிய பரிகாரங்களை செய்யுங்கள். அதிகம் மனஅழுத்தம் உள்ள துறையில் பணிபுரிவதை தவிருங்கள்.
மூச்சு பிரச்சினைக்கு சித்தர்கள் வழியில் குணப்படுத்தினால் ஒரளவு தீர்வு ஏற்படும். கண்டக்கத்தரி என்ற காயை வாங்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சினை தீரும்.
கிராமபுறங்களில் முரட்டு வைத்தியம் என்ற ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கி வாரம் ஒரு முறை சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு நிரந்தரவு தீர்வு ஏற்படும்.
இன்று மதியம் கோயம்புத்தூர் பயணம். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோயம்புத்தூரில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Ennadhu brandi kudikkavaa?adhellaam venaam vedhathri maharishiyin manavala kalai payirchi seyya sollunga.
Post a Comment