Followers

Friday, June 5, 2015

ஆலய தரிசனம்


வணக்கம்!
          ஒரு நண்பர் என்னை சந்திக்கும்பொழுது கேட்டார் நீங்கள் ஏன் கோவிலுக்கு செல்லுகின்றீர்கள். என்ன காரணத்தால் அப்படி செல்லுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார்.

என்னிடம் அம்மன் இருக்கும்பொழுது எதற்க்காக கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற அடிப்படையில் கேள்வி இருந்தது. சின்ன வயதில் இருந்தே எனக்கு கோவிலுக்கு செல்வது மிகவும் பிடித்தமான ஒன்று. நான் வளர்ந்த பிறகு அதுவே எனக்கு பழக்கமாகிவிட்டது. முதல் காரணம் இது தான். 

ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்பொழுது கோவிலுக்கு உள்ளே செல்லகூடாது கோபுர தரிசனம் மட்டும் போதும் என்பது எங்களின் வழிமுறை. இந்த வழிமுறை இருந்தாலும் நான் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

உள்ளே கோவிலுக்குள் செல்லும்பொழுது அந்த கோவிலின் ஒவ்வொரு விசயத்திலும் நான் கவனம் செலுத்துவது வழக்கம். ஏதாவது ஒரு இடத்தில் தவறுகள் அதாவது சக்தியின் நிலை குறைபாட்டோடு தெரிந்தால் குருவை நினைத்து அதனை சரி செய்யவேண்டும் என்றும் நினைப்பேன். 

ஒரு சில கோவிலுக்களுக்கு என்னுடைய தேவைக்காக கோவிலுக்கு செல்வதும் உண்டு. அதிகப்பட்சம் அந்த கோவிலை தரிசனம் செய்யவேண்டும் என்று ஒரு சில சூட்சமநிலை இருக்கின்றது. அந்த காரணத்திற்க்காகவும் கோவிலுக்கு செல்வது உண்டு. முதல் நிலையில் இருப்பவர்கள் கண்டிப்பாக ஆலயதரிசனம் செய்துக்கொண்டே இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Jaya prakash said...

மிதுன சனிக்கு பிறகு ஜோதிடத்தில் எந்த பதிவையும் இடவில்லையே..... ஏன்? மறந்து விட்டீர்களா?