Followers

Tuesday, June 30, 2015

முதல் படி


வணக்கம்!
          ஆன்மீகத்தை அறிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உங்களின் மனதை அதற்கு தயார்படுத்துக்கள். நாம் ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும் என்றால் நமது மனதை அதற்கு தயார் செய்யவேண்டும்.

நம்பிக்கையோடு முதல் படியை எடுத்துவைத்தால் அனைத்தும் நல்லதா நடைபெறும். நம்பிக்கையற்று எடுத்து வைத்தால் எந்த காரியத்திலும் நாம் முன்னேற்றம் அடையமுடியாது. உங்களின் மனதை தயார்படுத்திக்கொண்டால் போதும் அதுவாகவே அனைத்தும் நடைபெற்றுவிடும்.

என்னை சந்திக்க வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். என்னிடம் அம்மனின் சக்தி இருக்கின்றது என்று மனதில் நினைத்துக்கொண்டு வரும்பொழுது உங்களுக்கு அம்மன் சக்தி கிடைக்கும். நமது மனது அதற்கு தயாராகும்பொழுது எளிதில் கிடைக்கும்.

மனதை முதலில் பிடித்துக்கொண்டு அதன் பிறகு மனதை விடுவது தான் இதில் உள்ள சூட்சமம். மனதை தயார் செய்து அதனை விட்டுவிட்டால் எளிதில் உங்களால் அனைத்து சக்தியையும் பெறமுடியும். தொடர்ந்து எப்படி எல்லாம் இதனை செய்யாலம் என்று வரும் பதிவில் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: