Followers

Friday, June 5, 2015

சித்தர்கள் பற்றி தெரிந்த சேதி


வணக்கம்!
          சித்தர்களை பற்றி நாம் படித்து தெரிவதைவிட ஒரு குருவின் வழிகாட்டுதலில் அவர்களைப்பற்றி நாம் அறிந்துக்கொண்டால் நன்றாக நமக்கு புரியவரும். புத்தகங்களில் உள்ள படிப்பைப்பற்றி நான் குறைச்சொல்லவில்லை அதுவும் படித்துக்கொண்டு ஒரு குருவின் வழிகாட்டுதலோடு செய்தால் நல்லது.

தற்பொழுது எல்லாம் குழந்தை இல்லை என்று பல பேர் கஷ்டப்படுகின்றனர். இதற்கு எல்லாம் சித்தர்களின் வழிகொண்டு அந்த பிரச்சினையை சரிசெய்யமுடியும். இன்றைக்கும் நாம் அலைந்து திரிந்தால் ஏதாவது ஒரு நல்ல சித்தர் நமக்கு கிடைப்பார். அவரின் அறிவுரையின் பேரில் குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

ஒரு சித்தர் நமக்கு குருவாக வந்தால் மிகப்பெரிய புண்ணியத்தை நாம் செய்து இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். அவர் கற்று தரும் ஒவ்வொரு விசயமும் நமக்கு மிகப்பெரிய பொக்கிஷமாகவே இருக்கும்.

சித்தர்கள் கண்டுபிடித்து கொடுத்த அனைத்தும் அற்புத விசயம் என்றாலும் அவர்களின் மிகப்பெரிய ஒன்று. சாகாகலை என்ற வி்த்தை தான். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சாகவேண்டும் என்று நிலை இருக்கும்பொழுது சாககூடாது என்று நினைத்து அதற்கு பயிற்சி செய்தார்கள் என்றால் அது தான் மிகப்பெரிய செயல்.

சித்தர்கள் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்தாலும் அவர்களைப்பற்றி எழுதியவர்கள் எல்லாம் தற்பொழுது இருந்த இடம் இல்லாமல் போய்விட்டார்கள் என்றே தோன்றுகிறது. அதனால் இத்தோடு இதனை முடித்துக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: