Followers

Tuesday, September 8, 2015

கேள்வி & பதில்


வணக்கம்!

ஐயா

இதற்கு நான் மறுப்பு தெரிவிக்கிறேன். ஏனெனில் அனைவரும் விவசாயத்தை விட்டால் சோத்துக்கு எங்கே போவது?
அப்போ யார்தான் விவசாயம் செய்வது?
நீங்கள் சொன்ன நஷ்ட தொழில் என்பது உண்மைதான்.இருந்தாலும் விவசாயத்தை கைவிட சொல்வது சரியல்ல.
மாற்று வழி கூறவும்.

எம்.திருமால்

நண்பர் தன்னுடைய நிலையை சொல்லியுள்ளார். ஒவ்வொரு தொழில் செய்யும் தொழிலாளி அவர்களின் பையனை எப்படியும் அவர்கள் தொழிலில் அமருவது போல் செய்வார்கள் ஆனால் விவசாய தொழில் செய்யும் விவசாயி மட்டும் அவர்களின் பையனை விவசாய தொழிலில் ஈடுபட நினைப்பதில்லை. இதிலேயே நாம் அந்த தொழிலைப்பற்றி புரிந்துக்கொள்ளலாம்.

விவசாயம் செய்ய வேண்டியதில்லை என்று சொல்லவில்லை. கடன் வாங்கி அந்த தொழிலை செய்யவேண்டிய நிலை ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும். அப்பொழுது அவர்களுக்கு பெரும் தோல்வி வரும்பொழுது அதனை தாங்கமுடியாது அல்லவா. அதனால் அந்த நேரத்தில் மட்டும் கொஞ்சம் ஒதுங்கி இருங்கள் என்று சொன்னேன்.

ஒரு விவசாயிக்கு ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்று நான் நினைத்து தான் அதனை சொன்னேன். மறுபடியும் சொல்லுகிறேன் உங்களுக்கு கெடுதல் வரும் நேரத்தில் அடுத்த வேலையை பார்க்கலாம்.

என்னுடைய நிலத்தை அப்படியே தரிசாக தான் போட்டுள்ளேன். எப்பொழுதாவது நல்ல நிலைமை விவசாயத்திற்க்கு ஏற்படும்பொழுது முதல் விவசாயியாக நானே அந்த தொழிலை செய்யவேண்டும் என்பதற்க்காக அந்த நிலத்தை அப்படியே விற்காமல் வைத்திருக்கிறேன். 

எனக்கு பெரிய கஷ்டம் வந்தபொழுது எல்லாம் அந்த நிலத்தை விற்காமல் கடன் வாங்கி தான் சமாளித்தேன். விவசாய புரட்சி ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விளைகிற அனைத்து பொருட்களுக்கும் நானே விலையை நிர்ணிக்கும் உரிமை எனக்கு வரும் என்று காத்துஇருக்கிறேன்.  அப்பொழுது அந்த நிலம் தேவைப்படும் என்று வைத்திருக்கிறேன்.


அம்மன் பூஜையை வரும் ஞாயிற்றுகிழமை வைக்கலாம் என்று இருக்கிறேன். பூஜைக்கு பங்களிப்பை அளிக்கும் நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Thirumal said...

ஐயா

மிக்க நன்றி.
உங்கள் கனவு நனவாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எம்.திருமால்