வணக்கம்!
ராகு கேதுவில் ஒன்றை மட்டும் சொல்லவேண்டும் அது ஏழாவது வீட்டில் ராகு கேது சம்பந்தப்படும்பொழுது எப்படிப்பட்ட பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கவேண்டும்.
களத்திரஸ்தானம் என்பதால் களத்திரவழியில் தோஷத்தை கொடுக்ககூடிய ஒன்று. நீங்கள் திருமணம் செய்தால் உங்களின் துணை உங்களை ஏமாற்றுவார் என்பது தான் இந்த தோஷத்தில் உள்ள பெரிய சிக்கல் என்று சொல்லலாம்.
உங்களின் துணை உங்களிடம் சண்டை போட்டுக்கொண்டு செல்வார். இந்த தோஷத்தை பெரியளவில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றாலும் இந்த காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு நிலையில் இன்று அறிவியல் உலகம் இருப்பதால் இதனையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
செல்போனில் ஏகாப்பட்ட ஏழரை வந்துவிடுவதால் இதனையும் நீங்கள் தோஷமாக எடுத்துக்கொண்டு பரிகாரம் செய்துக்கொள்ளலாம். கண்டிப்பாக வருடத்திற்க்கு ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்யவேண்டும்.
திருமணம் ஆக இருப்பவர்கள் இதனை ராகு கேது தோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம். ராகு கேது தோஷம் இருந்தால் இதனைபோலவே உள்ள ஜாதகத்தை தேர்ந்தெடுத்து செய்துக்கொள்ளுங்கள்.
ராகு கேது தோஷ பரிகாரம் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது உங்களின் ஜாதகம் மற்றும் பணத்தை அனுப்ப இறுதி தேதி சனிக்கிழமை. சனிக்கிழமைக்கு பிறகு வரும் ஜாதகங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment