வணக்கம்!
நண்பர் பித்ருதோஷத்தைப்பற்றி கேள்வி கேட்டு அனுப்பி இருந்தார்.
கேள்வி
chinna thambi said...
சார் வணக்கம் ராகு,கேது 1,5,9,3 இல் இருந்தாலே பித்ரு தோஷம் தானா?இல்லை ராகு,கேது அமர்ந்த ஸ்தான அதிபதி மறைவிடங்களில் அமராமல் நல்ல நிலையில் இருந்தால் தோஷம் அடிபடுமா?இல்லை சூரியன் உச்சமாக இருந்தாலும் தோஷம் அடிபடுமா? தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் நன்றி.....
பதில்
நான் சாேதிடபலனை சொல்லும் காலத்தில் இப்படி தான் பலனை சொன்னேன். 3 5 9 ராகு கேது சம்பந்தப்படும்பொழுது அது பித்ருதோஷம் என்று சொன்னேன். அந்த நேரத்தில் நான் படித்த விதியை வைத்து கணித்து சொன்னது ஆனால் சோதிடஅறிவு என்பது அதனை தாண்டி அனுபவத்தில் நிறைய இருக்கின்றது ஆன்மீகத்திலும் நிறைய இருக்கின்றது.
நீங்கள் சொன்னது போல எல்லாம் தோஷம் கிடையாது. ஒரு சிலருக்கு தான் பித்ருதோஷம் என கணிக்கீடு செய்யப்படவேண்டும். அது அவர்களின் ஜாதகத்தை வைத்து முடிவு செய்யபடவேண்டும்.
நண்பர் சொன்ன ஒரு விசயத்தை நன்றாக கவனியுங்கள். சூரியன் உச்சமாக இருந்தால் என்ற ஒன்றை சொல்லிருக்கிறார். சூரியன் தந்தைக்காரகன். ஒரு தந்தை ஒழுங்காக இருந்தால் அவனின் வாரிசுகள் அந்தளவுக்கு தோஷத்தில் அடிபடுவது கிடையாது. சூரியன் உச்சமாக இருந்தால் பெரும்பாலும் தந்தை நல்ல நிலையில் இருப்பார். தந்தை நன்றாக இருக்கும்பொழுது வாரிசுகள் கஷ்டபடபோவதில்லை.
அனுபவத்தில் ஒரு சில ஜாதகத்தில் தந்தை நல்ல வசதியாக இருந்திருக்கிறார்கள் ஆனால் பித்ருதோஷம் வேறு விதமாக ஒரு பிரச்சினையை கிளப்பிவிட்டது. வாரிசுகளின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருந்தால் சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு இளவயதிலேயே காது கேளாத தன்மை வந்திருக்கிறது. அவர்களின் தந்தை இதற்கே பல லட்சங்களை செலவு செய்திருக்கிறார்கள்.
ராகு கேது அமர்ந்த அதிபதி நல்ல நிலையில் இருந்தால் இந்த தோஷங்கள் ஏற்படுவதில்லை என்பது உண்மை தான் ஆனால் பித்ருதோஷம் என்று சோதிடவிதி சொன்ன விதி உண்மை தான் என்ன என்றால் என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன் நண்பரே. பித்ருதோஷம் இருக்கும் நபர்களுக்கு ஒரு குறை என்பது இருக்கின்றது. ஏதோ ஒரு விசயத்தில் அவர்கள் கஷ்டபடுகிறார்கள். இதனை நம்மிடம் கூட சொல்லுவதில்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் இது நடக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஒவ்வொரு மனிதனின் மறைமுக வாழ்வு என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அந்த மறைமுகவாழ்வில் பிரச்சினை இருக்கின்றது என்பதை தான் பித்ருதோஷமும் காட்டுகிறது. 3 5 9 யில் ராகு கேது சம்பந்தப்பட்டாலே பித்ருதோஷம் இருக்கின்றது அதன் வீரியம் வேறுவிதத்தில் இருக்கலாம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி....மேலும் எனது கேள்விக்கு தனி பதிவு
எழுதியதிற்கும் மிக்க நன்றி .......
Post a Comment