வணக்கம்!
கிராமபுறங்களில் உள்ளவர்களுக்கு மிகப்பெரிய ஆதாரமாக இருப்பது அவர்கள் வளர்க்கும் பசு மாடுகள். பசுவை வைத்து பால் கறந்து அதன் வழியாக குடும்பத்தை வளர்த்தவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள்.
ஒரு பசு மாடு இருந்தால் ஒரு குடும்பம் பிழைத்துக்கொள்ளும். தற்பொழுதும் பசுமாடு வளர்ப்பவர்கள் அதிகம் இருக்கின்றனர். நானும் பசு மாடு வளர்த்து வருபவன் தான். அதன் வழியாக எனது குடும்பமும் பயன் அடைந்து வருகின்றது.
முப்பது வருடங்களுக்கு முன்பு பசு வைத்து பால் கறந்தால் ஒரு நடைமுறை இருக்கும். பசுவின் பாலை நாம் விற்போம் அல்லவா அந்த பசுவின் பாலை மாதம்தோறும் வரும் அமாவாசை அன்று பணம் வாங்கிககொள்ளகூடாது. இலவசமாக பசுவின் பாலை கொடுக்கவேண்டும்.
அமாவாசையில் தானம் செய்வதற்க்கு ஏதுவாக இதனை அந்த காலத்தில் வைத்திருந்தார்கள். இன்று இது நடைமுறையில் இல்லை. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிக்கை மட்டும் இலவசமாக கொடுப்பது உண்டு.
அமாவாசை என்றாலே தானம் செய்து அதன் வழியாக நமக்கு பித்ருதோஷம் இல்லாமல் பார்த்துக்கொண்ட காலமாக இருந்தது. இன்று தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை மட்டும் இப்படி நடக்கிறது. உங்களால் முடிந்தால் அமாவாசை அன்று மட்டும் இப்படி தானம் செய்து பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment