Followers

Friday, December 30, 2016

கிரகங்கள் கொடுக்கும் வாழ்க்கை


ணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் தீயகிரகங்களின் வேலை அதிகமாக இளமையில் வந்துவிட்டால் பாதி வயதுக்கு மேல் அவர்களின் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். தீயகிரகங்கள் இளமையில் வாட்டி வதைக்கும்பொழுது அவர்களுக்கு பாதிவயதிற்க்கு மேல் நல்ல அனுபவம் ஏற்பட்டு வாழ்வில் தோல்வியை சந்திக்கமாட்டார்கள்.

இளமையில் நல்ல கிரகங்கள் வேலை செய்தால் இளமையில் ஊதாரியாக செலவு செய்து பாதி வயதுக்கு மேல் தீயகிரகங்களின் பிடியில் சிக்கும்பொழுது அதிக துயரத்தை சந்திப்பார்கள்.

ஒருவர் வறுமையில் இருந்து செல்வவளத்திற்க்கு செல்லலாம். செல்வசெழிப்போடு இருந்துவிட்டு மறுபடியும் கீழே வந்தால் அவர்களால் தாங்கிக்கொள்வது கடினமாக இருக்கும்.

ஜாதகத்தில் உள்ள தீயகிரங்கள் முழுவதும் வேலை செய்துவிட்டால் நல்லது அதன் பிறகு ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழலாம். தீயகிரகங்கள் தன்னுடைய பணியை முடித்துவிட்டால் அதன் பிறகு நல்ல கிரகங்களின் பலனை நாம் முழுவதும் பெற்றுவிடலாம்.

மூன்றாவது சுற்று ஆரம்பம் ஆனவுடன் நமக்கு டிக்கெட் தீயகிரகங்கள் கொடுத்துவிடும். இந்த ஜென்மத்திலேயே அனைத்து கிரகங்களின் வேலையும் முடிந்துவிட்டால் அவர்க்கு மோட்சம் கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: