வணக்கம்!
ஒருத்தருடைய மணவாழ்வுக்கு சுக்கிரன் மிக மிக முக்கியமாக கருதப்படுகின்ற ஒரு கிரகமாக இருக்கும். மணவாழ்க்கை சரியில்லை என்றாலும் சுக்கிரனை தான் நாம் பார்க்கவேண்டும். அதன் பிறகு தான் அடுத்த கிரகங்களைப்பற்றி பார்க்கவேண்டும்.
மணவாழ்க்கைக்கு சுக்கிரன் தேவையோ இல்லையோ அவர் அவர்களின் பெற்றோர்கள் கண்டிப்பாக அவர்களுடன் இருப்பது நல்லது. இளம்ஜோடிகள் என்று ஒரு சில பெற்றோர்கள் அவர்களை தனியாக வீடு பார்த்து அவர்களை தனிமைப்படுத்திவிடுகின்றனர்.
தனிமையில் இருக்கும் இளம் தம்பதினர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்வே பல காலங்கள் ஆகும். ஒரு சிலருக்கு ஒரு வருடத்திற்க்கு மேல் கூட ஆகலாம். அவர்களை தனியாக வைத்தால் அவர்களுக்குள் பிரச்சினை உருவாகி அவர்களின் மணவாழ்வை பாதிக்க செய்கிறது.
சுக்கிரன் சரியில்லாத தம்பதினர்களாக இருந்தால் இந்த சண்டை ஒரே மாதத்தில் ஆரம்பித்து பெரியளவில் வந்துவிடுகின்றது. பல குடும்பங்களில் பெற்றோர்கள் செய்கின்ற தவறால் தான் அவர்கள் பிரிகின்றனர்.
சுக்கிரன் சரியில்லாத மற்றும் சுக்கிரன் நன்றாக இருந்தால் கூட அவர்களின் பெற்றோர்கள் உடன் இருந்து அவர்களுக்கு குடும்பத்தின் பாரம்பரியத்தைப்பற்றி சொல்லிக்கொடுங்கள். சுக்கிரனால் வரும் பாதிப்பு குறையும்.
சுக்கிரன் எந்த கிரகத்தோடு அமர்ந்திருக்கின்றது என்பதையும் பாருங்கள். சுக்கிரன் செல்லும் நட்சத்திரம் ராசி ஆகியவையும் பார்த்தால் கணித்துவிட்டு அதற்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.
சுக்கிரன் எந்த கிரகத்தோடு அமர்ந்திருக்கின்றது என்பதையும் பாருங்கள். சுக்கிரன் செல்லும் நட்சத்திரம் ராசி ஆகியவையும் பார்த்தால் கணித்துவிட்டு அதற்கு பரிகாரத்தை பரிந்துரை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment