வணக்கம்!
கடன் இந்த வார்த்தை மிகப்பெரிய வார்த்தை என்பது கடன் வாங்கியவர்களுக்கு தான் தெரியும். பல பேர் இறந்தர்க்கும் பல குடும்பங்கள் காணாமல் போனதற்க்கும் இந்த கடன் தான் காரணமாக இருக்கும் என்று சொன்னால் அது தான் உண்மையான ஒரு விசயமாக இருக்கும்.
சோதிடத்தில் ஆறாவது வீட்டைப்பற்றி நிறைய நான் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் தேடிப்படித்து பார்த்தால் நிறைய சுவராசியங்கள் உங்களுக்கு கிடைக்கும். கடனைப்பற்றி நாமும் நிறைய சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.
கடன் வாங்கியவர்கள் அதனை திரும்பிக்கொடுக்கமுடியாமல் படுகின்ற பாடு இருக்கின்றதே அது போல ஒரு கொடுமையான விசயம் எதுவும் இருக்கவே முடியாது என்று சொல்லலாம். இதில் வட்டிக்கடன் என்பது மிகப்பெரிய கொடுமை.
நமது ஜாதக கதம்பத்தில் இருந்து மற்றும் நேரிடையான நண்பர்கள் நிறைய பேர் கடன் வாங்கிவிட்டேன் அதனை திருப்பிக்கொடுக்கமுடியாமல் என்னை தேடிவருவார்கள். கடன் வாங்கிவிட்டேன் இவர் என்னை தொந்தரவு செய்கிறார் கொஞ்சகாலம் அவர் என்னை கேட்காமல் இருக்க வையுங்கள் என்று வருவார்கள். நானும் நிறைய பேர்களுக்கு இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன்.
என்னுடைய குருவின் பேச்சை மீறி இந்த செயலை செய்துக்கொண்டு இருக்கிறேன் என்பது தான் உண்மை. குரு கடன் கொடுத்தவர்களுக்கு கொடுத்து தான் ஆகவேண்டும் அதனை தடுக்காதே என்பார். என்ன செய்வது ஒவ்வொருவரின் சூழ்நிலையும் அவர்களை போட்டு தாக்கிவிடுகின்றது இதனை செய்துக்கொடுத்து தான் ஆகவேண்டும் என்று செய்துக்கொடுத்து கொண்டு இருக்கிறேன்.
கடன் என்பது நமது சோதிடத்தில் ஆறாவது வீட்டை காட்டுவார்கள். மறைவு ஸ்தான ஆறாவது வீடு பல பேரை கொன்று இருக்கின்றது. ஆறாவது வீட்டு அதிபதி தசா அல்லது புத்தி நடந்தால் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
ஆறாவது வீடு மட்டும் இல்லாமல் நமக்கு வருகின்ற கோச்சாரபலன்களும் அவ்வப்பொழுது கடனில் ஒருவரை சிக்க வைத்துவிடுகின்றது அதிலும் எச்சரிக்கையோடு இருந்து உங்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் கடன் தொல்லை இருக்ககூடாது என்று தான் நமது நவஅம்மன்(சண்டி)யாகத்திலும் மற்றும் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் அம்மன் பூஜையிலும் பிராத்தனை வைத்துக்கொண்டு வருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment