Followers

Thursday, July 5, 2018

பூஜைகள்


ணக்கம்!
         பொதுவாக நான் பூஜைகள் பக்கம் அதிகம் செய்ய சொல்லுகிறேன். ஏன் என்றால் இது உங்களை காக்கும் என்பதால் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கசொல்லுகிறேன். நீங்கள் ஒரு யோகா மற்றும் தியானம் செய்தால் அது உங்களை காக்கும். பூஜைகள் உங்களின் குடும்பத்தையே காக்ககூடிய ஒரு செயல் என்பதால் இதனை பரிந்துரை செய்வது உண்டு.

பூஜைகளால் தான் அனைத்தும் செய்யும்முடியும் என்ற வாதத்தை மட்டும் வைக்கவில்லை. நீங்கள் செய்யும் உழைப்பு நல்ல நிலையில் வருவதற்க்கு இது உதவி செய்யும் என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.

தர்மம் செய்தால் அது உடனே உங்களுக்கு பயன் தராது என்பது நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு தான் பூஜைகளின் மீது கவனம் வையுங்கள் என்று சொல்லுகிறேன். தர்மம் செய்யவேண்டும் அது எப்பொழுது என்றால் ஒரளவு நீங்கள் நல்ல நிலைக்கு வரும்பொழுது அதனை செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் இருக்கும் நிலையில் இருந்து உங்களை மேலே தூக்கிவிடும் சக்தியை பூஜைகள் மட்டுமே கொடுக்குமே தவிர மற்றது எதுவும் தராது என்பது மட்டும் அனுபவ உண்மை. பாக்கியஸ்தானத்தை முதலில் வழியை ஏற்படுத்திக்கொடுப்பது பூஜைகள் தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் போதும்.

பூஜைகள் என்னிடம் தான் செய்யவேண்டும் என்பதில்லை. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூட செய்து உங்களின் நிலையை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: