Followers

Wednesday, July 11, 2018

கேள்வி & பதில்


அன்புள்ள ராஜேஷ்,
                  எனது பெயர் M. செந்தில்குமார் 35, மதுரையில் இருக்கின்றேன், பொதுவாக கன்னி தெய்வத்தை (சக்தியை) எடுக்க வேண்டும் என்றால் ஜாதகத்தில் பத்தாம் இடத்தில் மாந்தி இருக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கன்னி தெய்வம் நமக்கு சாதகமாக இருக்கும், இல்லை என்றால் நமக்கு எதிர்மறையான பலன்களை தரும் சொல்லுகிறார்கள், இதில் எந்த அளவுக்கு உண்மை? உங்கள் கருத்தை ( ASTROVANAKAM.BLOGSPOT.COM) தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் ராஜேஷ்.


இப்படிக்கு அன்புள்ள
M. செந்தில்குமார்

பதில்
      நம்முடைய ஜாதகத்தை பார்த்து அதற்கு தகுந்தமாதிரி சக்தியை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது தவறான ஒன்று. மாந்திக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. சொல்லபோனால் சக்தியை எடுப்பதற்க்கு ஜாதகத்தை பார்ப்பதில்லை.

ஜாதகத்தை பார்த்து தான் சக்தியை எடுக்கவேண்டும் என்று சொல்லுவது பொய்யான ஒரு விசயம் தான். ஒரு குரு ஜாதகத்தை பார்த்து சக்தியை கொடுப்பதில்லை. ஏதோ ஒன்று உங்களை பிடிக்கலாம் அல்லது நீங்கள் தீவிரமாக எடுக்கவேண்டும் என்று செயலில் நீங்கள் இருந்தால் சக்தியை கொடுத்துவிடுவார்.

சக்தியை எடுத்து அது தவறான வழிக்கு கொண்டு செல்வதும் அதனை சரியாக பயன்படுத்துவதும் அவர்களின் கையில் அதிகப்பட்சம் இருக்கின்றது. அதனைவிட குருவின் கையிலும் இது இருக்கின்றது என்று சொல்லலாம்.

நல்ல குருவாக இருந்தால் உங்களை தவறான வழியில் கொண்டு செல்லவிடமாட்டார். குருவின் எண்ணம் போலவே உங்களின் செயல் இருக்கும். குருவை விட்டு நீங்கள் வந்தாலும் அவரின் கட்டுபாட்டில் தான் நீங்கள் இருப்பீர்கள். ஜாதகத்திற்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை நண்பரே. நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: