Followers

Monday, July 16, 2018

சுக்கிரனால் திருமண தடை



வணக்கம்!
          ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கபட்டு இருந்தால் அவர்க்கு திருமண யோகம் என்பது அந்தளவுக்கு இருக்காது என்று சொல்லலாம். குரு கிரகம் திருமணத்தை தரும் என்றாலும் சுக்கிரன் கிரகம் நன்றாக இருந்தால் தான் அதனைப்பற்றி சிந்தனையை தூண்டும்.

திருமண ஆசை வந்தால் தான் திருமணத்திற்க்கு செல்ல முடிவு எடுப்பார்கள். ஒரு சிலருக்கு கடுமையாக சுக்கிரன் பாதிக்குப்பட்டு இருக்கும்பொழுது அவர்க்கு திருமண ஆசை இருக்காது. எதற்க்கு திருமணம் சாதித்தவர்கள் அனைவரும் திருமணம் செய்துக்கொண்டு சாதித்தவர்களா திருமணம் ஆகாமல் இருந்தால் தான் சாதிக்கமுடியும் என்பார்கள்.

சுக்கிரன் பாதிக்கும்பொழுது அந்த தூண்டுதல் சக்தியை கொடுப்பதில்லை. ஒரு சிலருக்கு சுக்கிரன் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் வேறு துறையில் சாதித்தவர்களும் இருப்பார்கள். இந்த சக்தி அந்த துறையில் சாதிக்க சென்றுவிடும்.

சுக்கிரன் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருக்கவேண்டும். சுக்கிரன் ஆறாவது வீட்டிற்க்கு சென்றாலும் ஒரு சிலருக்கு திருமணம் அமைவதில்லை. ஆறாவது வீட்டில் சுக்கிரன் சூரியனோடு இருந்தால் அவர்களுக்கு திருமணம் மிக கஷ்டப்பட்டு நடத்தவேண்டும்.

ஏழாவது வீட்டு காரத்துவம் ஆறாவது வீட்டிற்க்கு சென்றுவிடுவதால் பலருக்கு திருமண யோகம் இருப்பதில்லை என்று சொல்லலாம். ஒரு சிலருக்கு திருமண யோகம் அமைவது அவர் அவர்களின் தசா உகந்த தசாவாக வருவதால் அமையும்.

உங்களுக்கு திருமணம் நடைபெறவில்லை என்றால் திருமண கோலத்தில் இருக்கும் கோவில்களுக்கு சென்றுவாருங்கள். திருமணம் நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: